Others

Wednesday, 29 December 2021 10:32 PM , by: R. Balakrishnan

Bank Holidays in January

அனைத்து தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகள் வரும் மாதத்தில், அதாவது ஜனவரி 2022 இல் 16 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர பட்டியலில் 2022 ஆம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியலை (Bank Holidays) வெளியிட்டுள்ளது. அதன்படி புத்தாண்டின் முதல் மாதத்தில் வங்கித் துறைக்கு பல விடுமுறைகள் வரிசையாக வருகின்றன.

ரிசர்வ் வங்கியின் (RBI) அறிவிப்பின்படி, ஜனவரி மாதத்தில் பொது விடுமுறை மற்றும் உள்ளூர் பண்டிகை விடுமுறை என்ற அடிப்படையில் மொத்தம் 16 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறை எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தாது என்றும் அறிவித்துள்ளது.

விடுமுறை நாட்கள் (Holidays)

  • ஜனவரி 1: புத்தாண்டு தினம் - ஐஸ்வால், சென்னை, காங்டாக் மற்றும் ஷில்லாங் உள்ளிட்ட இடங்களில் வங்கிகள் செயல்படாது.
  • ஜனவரி 3: புத்தாண்டு கொண்டாட்டம்/லோசூங் - ஐஸ்வால் மற்றும் கேங்டாக் பகுதிகளில் விடுமுறை.
  • ஜனவரி 4: லோசூங் - கேங்டாக் பகுதியில் விடுமுறை
  • ஜனவரி 11: மிஷனரி தினம் -ஐஸ்வால் பகுதியில் விடுமுறை
  • ஜனவரி 12: சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் - கொல்கத்தா பகுதியில் விடுமுறை
  • ஜனவரி 14: மகர சங்கராந்தி/பொங்கல்- அகமதாபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விடுமுறை
  • ஜனவரி 15: உத்தராயண புண்யகால மகர சங்கராந்தி விழா/மகே சங்கராந்தி/சங்கராந்தி/பொங்கல்/திருவள்ளுவர் தினம் - பெங்களூரு, சென்னை, காங்டாக் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட வங்கி கிளைகள் முழுவதிற்கும் விடுமுறை.
  • ஜனவரி 18: தை பூசம் -சென்னை அதாவது தமிழ்நாட்டில் விடுமுறை.
  • ஜனவரி 26: குடியரசு தினம் - இம்பால், ஜெய்ப்பூர், ஸ்ரீநகர், போபால், புவனேஷ்வர், சண்டிகர் மற்றும் அகர்தலா தவிர நாடு முழுவதும் விடுமுறை.

சனி மற்றும் ஞாயிறு (Saturday & Sunday)

  • ஜனவரி 2: ஞாயிற்றுக்கிழமை
  • ஜனவரி 8: மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை
  • ஜனவரி 9: ஞாயிற்றுக்கிழமை
  • ஜனவரி 16: ஞாயிற்றுக்கிழமை
  • ஜனவரி 22: மாதத்தின் நான்காவது சனிக்கிழமை
  • ஜனவரி 23: ஞாயிற்றுக்கிழமை
  • ஜனவரி 30: ஞாயிற்றுக்கிழமை

மேலும் படிக்க

ஜனவரி 1 முதல் புதிய விதிகள் அமல்: ரிசர்வ் வங்கி!

அனைவருக்கும் மிகவும் அவசியமானது ஆயுள் காப்பீடு பாலிசி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)