தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக நேற்று தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பரவலான மழை பெய்தது மற்றும் வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் வெளுத்து வாங்கியது.
இதனிடையே தென் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் மற்றும் இதர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி முதல் கோவா வரை ஏற்பட்டுள்ள காற்றின் திசை மாறுபாடு காரணமாக வடக்கு மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இடி தாக்கி 2 பேர் பாலி
சிவகங்கை மாவட்டம் கோவானுர் கிராமத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த 51 வயது முதியவர் மயில்சாமி இடிதாக்கி உயிர் இழந்தார். இதே போல் தாளவாசலை சேர்ந்த சபரிமுத்து ராஜன் என்பவர் குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது இடி தாக்கி உயிர் இழந்தார்.
முன்னாள் இயக்குனர் ரமணன் அறிவிப்பு
நடப்பாண்டில் தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை இயல்பான நிலையில் இருக்கும் என முன்னாள் வானிலை இயக்குனர் ரமணன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் வரும் 20 ஆம் தேதி பருவ மழை துவங்கும் சாத்திய கூறுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மன்னார் வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையை பொறுத்தே மழையின் அளவு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
K.Sakthipriya
Krishi Jagran