சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 24 September, 2022 9:22 AM IST
Fixed Deposit Shemes
Fixed Deposit Shemes

2020ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பு தொடங்கியபோது சீனியர் சிட்டிசன்கள் பயனடையும் வகையில் எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஐடிபிஐ ஆகிய வங்கிகள் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தின.

சீனியர் சிட்டிசன்கள் (Senior Citizens)

சீனியர் சிட்டிசன்கள் பெரும்பாலும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் அதிகம் முதலீடு செய்கின்றனர். கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் சீனியர் சிட்டிசன்கள் அதிக வருமானம் பெறும் வகையில் மேற்கூறிய வங்கிகள் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தின. இந்த சிறப்பு திட்டங்களின் கீழ் ஏற்கெனவே சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் வட்டியுடன் இன்னும் கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டும் வருகின்றன.

பிக்சட் டெபாசிட் (Fixed Deposit)

ஐசிஐசிஐ வங்கி தனது சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை அக்டோபர் 7ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. அதேபோல, எஸ்பிஐ வங்கி தனது சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை 2023 மார்ச் மாதம் வரை நீட்டித்துள்ளது. எனினும் எச்டிஎஃப்சி, ஐடிபிஐ ஆகிய வங்கிகளின் சீனியர் சிட்டிசன் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் வரும் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகின்றன. இதுவரை இவ்விரு வங்கிகளும் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை நீட்டிப்பதாக அறிவிப்பு வெளியிடவில்லை. எச்டிஎஃப்சி வங்கி தனது சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.75% வட்டி வழங்குகிறது. அதேபோல ஐடிபிஐ வங்கியும் தனது சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.75% வட்டி வழங்குகிறது.

எச்டிஎஃப்சி, ஐடிபிஐ வங்கிகளின் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புவோர் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் கணக்கு தொடங்கிக் கொள்ளலாம்.

மேலும் படிக்க

ICICI வங்கியின் அசத்தலான சேமிப்புத் திட்டம்: இலாபத்தை அள்ளலாம்!

ரேஷன் கடையில் இனிமேல் இதனை செய்யக் கூடாது: தமிழக அரசு அதிரடி உத்தரவு!

English Summary: 2 Schemes Ending: Senior Citizens Shocked!
Published on: 24 September 2022, 09:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now