நாளுக்கு நாள் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக எலக்ட்ரிக் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. சத்தமே இல்லாத இயக்கம், புகை இல்லாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்தது உள்ளிட்ட அம்சங்களால் வாடிக்கையாளர்களும் எலக்ட்ரிக் பைக்குகளை விரும்பத் தொடங்கியுள்ளனர். அதனால் எலக்ட்ரிக் பைக்குளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தான் தற்போது பெட்ரோல் இருசக்கர வாகனத் தயாரிப்பில் ஜாம்பவான்களாக இருக்கும் பஜாஜ், யமாஹா மற்றும் கேடிஎம் நிறுவனங்கள் கூட வரும் ஆண்டு எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளன. என்னென்ன நிறுவனங்கள், எந்தெந்த மாடல்களில் பைக்குகளை அறிமுகம் செய்ய உள்ளார்கள் என்ற விபரங்களை இப்போது பார்க்கலாம்
அல்ட்ரா வொயலெட் F-77- சூப்பர் பைக்
இந்தியாவின முன்னனி எலக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனமான அல்ட்ரா வொயலெட் நிறுவனம் இந்த ஆண்டு எலக்ட்ரிக் சூப்பர் பைக்கை அறிமுகம் செய்ய உள்ளது. F-77 என்ற பெயரில் அறிமுகமாக உள்ள இந்த பைக்கின் விலை 3லட்சத்து 80 ஆயிரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பைக் வெளியான பிறகு அநேகமாக இந்த F-77 சூப்பர் பைக் தான் இந்தியாவின் காஸ்ட்லியான எலக்ட்ரிக் பைக்காக இருக்கும். அதிகபட்சமாக மணிக்கு 152 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த சூப்பர் பைக், 2.9 விநாடிகளில் 100 கிலோமீடட்ர் வேகத்தை எட்டிப் பிடிக்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 307 கிலோமீட்டர் பயணிக்குமாம். 2023 ஆம் ஆண்டு அறிமுகமாக உள்ளது இது உண்மையிலேயே எலக்ட்ரிக் சூப்பர் பைக் தான்.
ஓலா எலக்ட்ரிக் பைக்
இந்தியாவின் மற்றொரு முன்னனி எலக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனம் ஓலா.. பாவிஷ் அகர்வாலின் தலைமையில் இயங்கும் இந்த நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் S1 – வகை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. வரும் ஆண்டு எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்ய ஓலா நிறுவனம் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. புதிய எலக்ட்ரிக் பைக் என்ன மாதிரி இருக்க வேண்டும் என்பதற்கான தங்களின் ஆலோசனைகளை பைக் பிரியர்கள் தெரிவிக்கலாம் என பாவிஷ் அகர்வால் ட்விட்டரில் கூறியுள்ளார்.
ஓபன் ரோர் ஸ்போர்ட்ஸ் பைக்
பெங்களூருவை மையமாக கொண்டு இயங்கும் மற்றொரு பிரபல எலக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனம் ஓபன் ரோர். இந்த நிறுவனம் வரும் ஆண்டு ஸ்போர்ட்ஸ் ரக எலக்ட்ரிக் பைக்குகளை தயாரிக்க முடிவு செய்துள்ளது. அசத்தலான ஸ்டைலுடன், அதிவேக திறன் கொண்ட வகையில் புதிய பைக் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மணிக்கு அதிக பட்சமாக 100 கிலோ மீ்ட்டர் வேகம் செல்லும் இந்த பைக்குகள் ஒற்றை சார்ஜில் 150 கிலோமீட்டர் தூரம் செல்லும் வகையில வடிவமைக்கப்பட உள்ளது. இதன் விலை 99 ஆயிரம் முதல் இருக்கும் என்றும் தற்போது இதற்கான 17ஆயிரம் ஆர்டர்கள் கையில் இருப்பதாகவும் ஓபன் ரோர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கேடிஎம் டியூக் பைக்
பஜாஜ் சேடாக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெற்றிகரமாக அறிமுகம் செய்து அசத்தியுள்ள பஜாஜ் நிறுவனம் அடுத்ததாக டியூக் ரக பைக்குகளை எலக்ட்ரிக் பைக்குகளாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 2023-ன் முதல் பாதியில் இந்த பைக்குகள் ஷோ ரூம்களில் கிடைக்கும் எனத் தெரிகிறது. 5.5 4KW திறன்கொண்ட பேட்டரி இந்த பைக்கில் பொருத்தப்பட உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் தூரம் செல்லும் வகையில் இந்த பைக்குகள் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: