Others

Tuesday, 18 January 2022 07:23 AM , by: R. Balakrishnan

Feast for future groom

ஆந்திராவில் மகர சங்கராந்தியை முன்னிட்டு வருங்கால மாப்பிள்ளைக்கு, 365 வகை உணவுகளுடன் அளிக்கப்பட்ட பிரமாண்ட விருந்தின் புகைப்படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பண்டிகைகளின் போது வீட்டு மருமகன்களை அழைத்து விருந்து மற்றும் பரிசுப் பொருட்கள் அளித்து மரியாதை செய்வது, தென் மாநில குடும்பங்களில் வழக்கமாக பின்பற்றப்படுகிறது.

மகர சங்கராந்தி விருந்து (Magara Sankranti Feast)

சமீபத்தில் ஆந்திராவில் அளிக்கப்பட்ட மகர சங்கராந்தி விருந்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் நரசாபுரத்தை சேர்ந்த தங்க நகை வியாபாரி வெங்கடேஸ்வர ராவ் - மாதவி தம்பதியின் மகள் குந்தவி.

இவருக்கும், சாய் கிருஷ்ணா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் திருமணம் நடக்க உள்ளது. இந்நிலையில் வருங்கால மாப்பிள்ளைக்கு மகர சங்கராந்தியை முன்னிட்டு பிரமாண்ட விருந்து அளிக்க வெங்கடேஸ்வர ராவ் - மாதவி தம்பதி முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், விருந்து நிகழ்ச்சி பெண் வீட்டில் நேற்று முன் தினம் நடந்தது. இதில் மாப்பிள்ளை சாய் கிருஷ்ணா, அவரது பெற்றோர் மற்றும் சில நெருங்கிய உறவினர்கள் பங்கேற்றனர். விருந்தில் 365 வகை உணவுகள் பரிமாறப்பட்டன.

பிரம்மாண்ட விருந்து (Great Feast)

அரிசி சாதத்துடன் 30 வகை குழம்புகள், புளியோதரை, பிரியாணி, கோதாவரி மாவட்டத்தின் பாரம்பரிய இனிப்பு வகைகள் விருந்தில் இடம் பெற்றன. பழங்கள், கேக், பிஸ்கெட், குளிர் பானங்கள் என உணவு மேஜை நிரம்பி வழிந்தது. இந்த பிரம்மாண்ட விருந்தின் புகைப்படம், சமூக வலை
தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் படிக்க

மழைக்காலத்தில் உதவிய மாடுகளுக்கு நன்றிக்கடன் செலுத்திய பொதுமக்கள்!

10 ரூபாய்க் கடன்: 11 ஆண்டுகளுக்குப் பின் வட்டியுடன் அடைப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)