அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என இந்த அரசு அறிவித்துள்ளது. இதனால், அவர்களது அகவிலைப்படி 38%மாக உயர்கிறது.
வைரஸ் பரவல்
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிடப்பட்டுள்ளது.
நிறுத்தி வைப்பு
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகளை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
குறைந்தது பரவல்
இதையடுத்து கொரோனா பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு படிப்படியாக அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அதிகரித்து வரும் விலைவாசியை எதிர்கொள்ள அனைத்து மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியானது உயர்த்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசு
அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியானது 4% உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. அகவிலைப்படி உயர்வானது கடந்த ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட்டுள்ளது.இதையடுத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் தங்களுக்கும் சலுவை அறிவிக்கப்படும் என எதிர்பார்த்திருந்தனர்.
அமலுக்கு வந்தது
இதே போல் கடந்த 8ம் தேதி முதல் புதுச்சேரி அரசு ஊழியா்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
38%மானது
இந்நிலையில் தற்போது குடும்ப ஓய்வூதியத்திற்கான அகவிலைப்படியானது 34 சதவீதமாக வழங்கப்பட்டு வருவதை 4% உயர்த்தி 38 சதவீதமாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த ஜூலை 1ம் தேதியிலிருந்து அமல்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையானது புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதி நிர்வாகத் தலைமை அதிகாரிகள் மற்றும் அரசு சார்பு துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...