Others

Wednesday, 09 February 2022 08:24 PM , by: Elavarse Sivakumar

அமெரிக்காவின் பூங்கா ஒன்றில் 410 பவுண்டு எடையுள்ள தங்கக்கட்டியை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது மற்றவர்களுக்கு மாபெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.இதனால், சாமானிய மக்கள் தாலிக்குக்கூடத் தங்கம் வாங்கிச் சேர்க்க பல காலம் காசை சேமிக்கும் சூழ்நிலை நிலவிவருகிறது.

தங்கம் விற்கும் விலையில் பெரும்பாலான மக்கள் சொந்தமாக சில கிராம்களில் தங்கத்தை வாங்குவதற்கே அரும்பாடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பணக்காரர்களே வாயைப் பிளக்கும் அளவிற்கு அமெரிக்காவில் ஒரு அதிசய சம்பவம் நடந்துள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த நிக்லஸ் காஸ்டெல்லோ (43) என்ற கலைஞர் ஒரு தங்க கன சதுரத்தை வடிவமைத்துள்ளார். 

இவர் காஸ்டெல்லோ காயின் கிரிப்டோ கரன்சியை விளம்பரப்படுத்துவதற்காக இந்த தங்க கன சதுரத்தை உருவாக்கியுள்ளார். இந்தத் தங்கக்கட்டி சுமார் 410 பவுண்டு எடையில் 24 கேரட் சுத்தமான தங்கத்தில் வடிவமைக்கப்பட்டது. இது தற்போது, நியூயார்க்கின் சென்ட்ரல் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த தங்கக்கட்டியின் மொத்த மதிப்பு 11.7 மில்லியன் அமெரிக்க டாலர் எனவும், இதை உருவாக்க 4,500 மணி நேரத்திற்கும் மேலானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மனிதகுல வரலாற்றில் இதற்கு முன் இவ்வளவு பெரிய அளவிலான தங்கம் ஒரு தூய பொருளாக வார்க்கப்பட்டதில்லை என நிக்லஸ் காஸ்டெல்லோ தெரிவித்துள்ளார்.

பூங்காவில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட தங்கக்கட்டியை அப்பகுதி மக்கள் பார்த்து வருகின்றனர். மேலும், பூங்காவில் இந்த தங்கக்கட்டியை பாதுக்காக்க ஒரு சிறப்பு பாதுகாப்புக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

இனிமேல் வார சம்பளம்! ஊழியர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சி!!

அச்சதலான 10 அடி தோசை - சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)