அதிக முதலீடுகள் செய்ய முடியாத ஆனால் சேமிக்கும் எண்ணம் இருக்கும் அனைவருக்கும் கைகொடுக்கும் சில திட்டங்களை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன.
இண்டெக்ஸ் ஃபண்டுகள்
இண்டெக்ஸ் ஃபண்டுகள் தான் அனைவரின் விருப்ப முதலீட்டுத் திட்டமாக இருக்கும். அதில் சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் சில சிப் (SIP) திட்டங்கள் ரூ.100 இருந்தே ரூ.500 வரை ஆரம்பிக்கின்றன. குறிப்பாக கோவிட்-19 தொற்றினை அடுத்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சிப் திட்டம் 5% சராசரி ஆண்டு வருமானத்தை அளித்து வருகிறது.
இண்டெக்ஸ் ஃபண்டில் இவ்வளவு லாபம் தரும் ஃபண்டுகள் மிகக் குறைவே. அதனால் இங்குக் குறிப்பிடப்படும் மியூச்சுவல் ஃபண்ட் சிப் திட்டம் சிறு மற்றும் குறு முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். அதிலும் நிஃப்டி பங்குச் சந்தையில் உள்ள வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் முதல் 100 நிறுவனங்களில் இந்த ஃபண்ட் முதலீடு செய்வதால், பெரிய சந்தை அபாயங்களில் இருந்து ஏற்படும் நஷ்டங்களிலிருந்து தப்பிக்கலாம்.
எடெல்வைஸ் நிஃப்டி பிஎஸ்யூ பாண்ட் இண்டெக்ஸ் ஃபண்ட் (Edelweiss NIFTY PSU Bond Plus SDL Index Fund 2026 - Direct Plan-Growth)
இந்த ஃபண்ட் நிஃப்டி பங்குச் சந்தையில் முதல் 100 இடங்களில் உள்ள வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கடன் பத்திரங்களில் முதலீடு செய்கிறது. இந்த ஃபண்ட் சென்ற ஆண்டு மார்ச் மாதம் எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட முதல் ஆண்டு முடியில் இந்த ஃபண்டின் சொத்து மதிப்பானது ரூ.5398.02 கோடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஃபண்டிற்கு இருக்கும் வரவேற்பினை நீங்கள் அரிய முடியும். ஓராண்டு முடிவில் இந்த ஃபண்ட் 4.49% சராசரி ஆண்டு லாபத்தை அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஃபண்டிற்கான குறைந்தபட்ச சிப் தொகை ரூ.500 ஆகவும் அதே Lumpsum எனில் ரூ.5000 ஆகும். 5 முதல் 7 ஆண்டுகள் வரை லாக்-இன் காலம் வைத்து இதில் நீங்கள் மாதந்தோறும் ரூ.500 முதலீடு செய்தால் 5 வருட இறுதியில் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம்.
Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.
மேலும் படிக்க
அரசு பணியாளர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு!
பென்சன் விதிமுறையில் மாற்றம்: பென்சனர்களுக்கு சூப்பர் அப்டேட்!