ஆசியாவின் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான கவுதம் அதானியின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரும் அவரது குடும்பத்தினரும், 60 ஆயிரம் கோடி ரூபாயை, தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்து உள்ளனர். கல்வி, திறன் மேம்பாடுமேலும் இந்த நன்கொடைகள் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்படும் என்றும், இந்த நன்கொடைகள் அதானி பவுண்டேஷன் வாயிலாக நிர்வகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நன்கொடை (Donation)
இந்திய நிறுவன வரலாற்றில் மிகப் பெரிய தொண்டு நன்கொடைகளில் இது ஒன்றாகும். அதுமட்டுமின்றி, உலகளவில் மார்க் ஜுக்கர்பெர்க், வாரன் பபெட் போன்றவர்கள் வரிசையில், கவுதம் அதானியும் இணைகிறார். இந்தியாவில் இவர் தவிர, 'விப்ரோ' நிறுவனர் அஜிம் பிரேம்ஜி மற்றும் 'வேதாந்தா' நிறுவனர் அனில் அகர்வால் ஆகியோரும் மிகப்பெரிய அளவில் நன்கொடைகள் வழங்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கவுதம் அதானி 1962ம் ஆண்டு ஜூன் 24ல் பிறந்தவர். இது குறித்து, கவுதம் அதானி கூறியவை: என்னுடைய தந்தை சாந்திலால் அதானியின் 100வது பிறந்த நாள் மற்றும் என்னுடைய 60வது பிறந்த நாள் என, இரண்டும் ஒரு சேர இந்த ஆண்டில் வருகிறது. இதை முன்னிட்டு, என் குடும்பத்தினர், தொண்டு பணிகளுக்காக 60 ஆயிரம் கோடி ரூபாயை வழங்குவது என முடிவு செய்துள்ளனர். கல்வி, திறன் மேம்பாடு ஆரோக்கியம் ஆகியவற்றில், குறிப்பாக நாட்டின் கிராமப் பகுதிகளில் இந்த நன்கொடை பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதானி குடும்பத்தின் இந்த செயல், மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களின் இந்த நன்கொடையால், கிராமப்பகுதிகளில் உள்ள திறன் வாய்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயனடைவார்கள்.
மேலும் படிக்க
இந்திய வம்சாவளி தமிழ் மாணவிக்கு ஃபுல்பிரைட் விருது!
வெளிநாடுகளுக்கு குடியேற விரும்பும் இந்தியப் பணக்காரர்கள்: இந்தியாவிற்கு இழப்பு நேரிடுமா?