Others

Sunday, 24 July 2022 04:50 PM , by: R. Balakrishnan

Eating Candy Job

கனடாவை சேர்ந்த மிட்டாய் நிறுவனம், மிட்டாயை சுவைத்துப் பார்ப்பதற்கு 62 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மிட்டாய் நிறுவனம் (Candy Company)

கனடாவை சேர்ந்த கேண்டி ஃபன்ஹவுஸ் (Candy Funhouse) என்ற மிட்டாய் நிறுவனம் தலைமை மிட்டாய் அதிகாரி என்ற பதவிக்கு ஆள் தேடி விளம்பரம் கொடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைமை மிட்டாய் அதிகாரிக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கனடா டாலர் சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் கனடா டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 62 லட்சம் ரூபாய்.

சரி இந்த தலைமை மிட்டாய் அதிகாரியின் வேலை என்ன? நிறுவனம் தயாரிக்கும் மிட்டாய்களை சுவைத்துப் பார்ப்பது உள்ளிட்ட ஜாலியான வேலைகள்தான் கொடுத்திருக்கின்றனர்.

இந்த வேலைக்கு சேரும் நபர் 5 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் எனவும் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோக, மிட்டாய்கள் மீது தீராக் காதல் கொண்டவர்கள் மட்டுமே இந்த வேலையில் சேர முடியும் என்பது நிறுவனம் போட்டுள்ள கண்டீஷன்.

மேலும் படிக்க

இராணுவ வீரரின் உயிரைக் காப்பாற்றிய ஐபோன்!

தொழில் தொடங்க விருப்பமா? மானியத்துடன் உதவும் அரசின் திட்டங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)