
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியத்தை போனஸ் தொகையாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு ரயில்வே ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நவராத்திரி, பூஜை, தீபாவளி என பண்டிகைக்காலம் நெருங்கிவிட்டது. எனவே ரயில்வே ஊழியர்கள் இந்தாண்டு போனஸ் தொகைக்காக ஆவலுடன் காத்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே ஊழியர்களுக்கு ஆயுத பூஜைக்கு முன்பாக போனஸ் பற்றிய அறிவிப்பு வெளியாவது வழக்கம்.
அமைச்சரவை ஒப்புதல்
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியத்தை போனஸ் தொகையாக வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.2,000 கோடி
இதனால் சுமார் 11 லட்சம் அரசிதழ் ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள். மேலும், போனஸ் தொகை வழங்குவதற்காக இந்திய ரயில்வேக்கு கூடுதலாக 2000 கோடி ரூபாய் செலவாகும்.
கடந்த ஆண்டிலும் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் போனஸ் தொகையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...