Others

Monday, 17 April 2023 09:47 PM , by: Elavarse Sivakumar

அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு என இந்த மாநில அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை அன்று இமாச்சல மாநிலத்தின் 76-வது நிறுவன தினம் கொண்டாடப்பட்டது. இதில் முதலமைச்சர் கலந்துகொண்ட சுக்விந்தர் சிங் சுகு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.  இந்த அறிவிப்புஅரசு ஊழியர்களுக்கும், மாநில நிர்வாகத்தில் உள்ள பெண்களுக்கும் பரிசாக அமைந்தது.

சூப்பர் அறிவிப்பு

அப்படி வெளியிடப்பட்ட சூப்பர் அறிவிப்பு என்ன தெரியுமா? அதுதான் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு. எவ்வளவு சதவீதம் என்று தெரிந்துகொள்வதில் ஆர்வம் அதிகரிக்கிறதா? அரசு அளிக்கப்போவது 3 சதவீத அகவிலைப்படி உயர்வு மக்களே!

இந்த அகவிலைப்படி உயர்வு, அரசு ஊழியர்களுக்கு மட்டும் மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த 3 சதவீத அகவிலைப்படி உயர்வு பொருந்தும் என்றும் அரசு அறிவித்துள்ளது. எனவே ஓய்வூதியதாரர்களும் அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.

இதன் மூலம் 2.15 லட்சம் ஊழியர்களும், 1.90 லட்சம்  ஓய்வூதியதாரர்களும்  பயனடைய உள்ளனர்.

42 %  அகவிலைப்படி

அண்மையில் அறிவித்த 4 சதவீத அகவிலைப்படி உயர்வின் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி சதவீதம் 42 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த அதிரடி அறிவிப்பின் மூலம், சுகு தலைமையிலான காங்கிரஸ் கட்சி, 2018ம் ஆண்டு அளித்த தனது சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

மாதம் ரூ.1,500

இதனிடையே  வரும் ஜுன் மாதம் முதல், 18 வயதிற்கும் மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்துலம் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க…

பெண்களுக்கு ரூ. 6000 வழங்கும் மத்திய அரசு!

சுட்டெரிக்கும் சூரியன்-கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்கும் வழிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)