மத்திய ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 38% ஆக உயர்ந்துள்ளது. இதனால் ரூ. 2.59 லட்சம் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு முன்பு ஊழியர்களின் அகவிலைப்படி 34% ஆக இருந்தது.
மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட காலமாக ஆசையோடு எதிர்பார்த்து காத்திருந்த விஷயம் தற்போது நிறைவேறிவிட்டது. ரக்ஷா பந்தனுக்கு முன்னதாகவே மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அரசாங்கம் 4% உயர்த்தி இருக்கிறது. ஜூன் மாதத்திற்கு பிறகு அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் தொழில்துறை தொழிலாளர்களின் (ஏஐசிபிஐ) டேட்டாக்களை வெளிவந்த பிறகு, அகவிலைப்படியில் நல்ல அதிகரிப்பு இருக்கும் என்பது தற்போது உறுதியாகிவிட்டது.
4% உயர்வு
இதன்படி, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி அதிகரிப்பு ஏஐசிபிஐ-ன் டேட்டாக்களை பொறுத்தது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
38% மாகிறது டிஏ
பே-கிரேடு லெவல் 3-ன் அதிகபட்ச அளவுகோலில் ரூ.56,900 அடிப்படை சம்பளத்தில் மொத்த வருடாந்திர அகவிலைப்படி ரூ.259,464 ஆக இருக்கும்.
ஆனால், தற்போதைய அகவிலைப்படியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கருத்தில்கொண்டால், வருடாந்திர ஊதிய உயர்வு ரூ.27,312 ஆக இருக்கும்.
அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்திய பிறகு, மத்திய ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 38% ஆக உயர்ந்துள்ளது., அதற்கு முன்பு ஊழியர்களின் அகவிலைப்படி 34% ஆக இருந்தது. இந்த அகவிலைப்படியானது செப்டம்பர், 2022 சம்பளத்தில் வழங்கப்படும்.
அதே சமயம் இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாத நிலுவைத் தொகையும் ஊழியர்களின் கணக்கில் வந்து சேரும். ஆக மொத்தத்தில் ஊழியர்களின் கணக்கில், டிஏ பாக்கியுடன் பெரிய தொகை வந்து சேரும்.
சம்பளத்தின் கணக்கீடு
பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ 56,900
புதிய அகவிலைப்படி (38%) ரூ 21,622/மாதம்
முன்னர் இருந்த அகவிலைப்படி (34%) ரூ 19,346/மாதம்
எவ்வளவு அகவிலைப்படி 21,622-19,346 அதிகரித்துள்ளது = ரூ.2260 /மாதம்
ஆண்டு ஊதிய உயர்வு 2260 X12 = ரூ 27,120
மேலும் படிக்க...