அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அப்பாடா எப்போதுதான் தீர்வு கிடைக்குமோ என்ற எதிர்பார்ப்பை நடுத்தரவாசிகளிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், எலெக்ட்ரிக் டூவீலர் ஸ்டார்ட் அப் நிறுவனமான Oben, முழு சார்ஜில் 200 கிமீ வரை ஓடக்கூடிய புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அடுத்த மாதம் இந்திய சந்தைகளுக்கு விற்பனைக்கு வருகிறது.
இதனைஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை நிற்காமல் ஓடும் திறன் படைத்தது. குறிப்பாக 2 மணி நேரத்திலேயே பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். இந்தியாவில் மின்சார இரு சக்கர வாகனங்களின் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது, ஒவ்வொரு நாளும் புதிய ஸ்டார்ட்அப்கள் தங்கள் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
வரும் சில வாரங்களில் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவில் நுழையும் இந்த ஸ்டார்ட்அப்களில் அடுத்தது ஓபன். மோட்டார் சைக்கிள்தான். மிகவும் ஸ்போர்ட்டியாகவும், சில ரெட்ரோ டச்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இ-பைக்கிற்கு சிவப்பு மற்றும் கருப்பு டூயல் டோன் வண்ணத் திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஓபன் எலக்ட்ரிக் பைக் (Electric Bike) வசதியான மற்றும் பிரீமியம் ரைடிங் நிலைப்பாட்டுடன் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. சாதாரண மோட்டார்சைக்கிளுடன் (Motor Bike) ஒப்பிடும்போது இந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் மிகவும் சிறப்பாக உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், இந்த இ-பைக்கை (E Bike) 200 கிமீ வரை ஓட்ட முடியும். இதன் வரம்பு ரிவோல்ட் மற்றும் ஓலா இருசக்கர வாகனங்களை விட அதிகம்.
2 மணி நேரத்தில்
எலக்ட்ரிக் பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிமீ ஆகும், மேலும் இது 3 வினாடிகளில் மணிக்கு 0-40 கிமீ வேகத்தை எட்டும். பைக்கில் உள்ள பேட்டரியை 2 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.
இதன் பேட்டரி பேக் அதிகபட்ச வெப்ப பரிமாற்ற தொழில்நுட்பத்துடன் வருகிறுது. இது பேட்டரியை குளிர்ச்சியாக வைத்திருக்கும் மற்றும் மோட்டார் சைக்கிள் நிலையான வேகத்தைப் பெறுகிறது. பொதுவாக ஐஓடி போன்ற இணைப்பு அம்சங்களை எலக்ட்ரிக் பைக்குகள் பெறலாம். அடுத்த மாதம் இந்த பைக்குகள் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு வருகிறது.
மேலும் படிக்க...
லதா மங்கேஷ்கரின் பல நூறு கோடி சொத்துக்கள் - யாருக்கு சொந்தம்?