வாட்சப்பிலேயே தபால் சேவைகள், வங்கி சேவைகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு முன்வந்துள்ளது. இதன் மூலம், தபால் சேவைளைப் பெற இனி தபால் அலுவலகத்திற்கு செல்லத் தேவையில்லை. வாட்சப்பிலேயே பெற முடியும்.
நாளுக்கு நாள் அறிவியல் கண்டுபிடிப்புகளும், வந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில், செல்போனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாட்ஸ்-அப் தற்போது அனைவராலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இதன்மூலம் தபால் சேவைகளை அறிமுகப்படுத்தி, இளைஞர்களைக் கவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வாட்ஸ்-அப் போஸ் ஆபீஸ் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
டிஜிட்டல் சேவை
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (India Post Payments Bank) பல ஆண்டுகளுக்கு முன்புத்தொடங்கப்பட்டது. இந்த வங்கி இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வருகிறது. வங்கி சேவைகளும், நிதி சேவைகளும் வேக வேகமாக டிஜிட்டல் மயமாகி வருகின்றன.
இந்நிலையில், டிஜிட்டல் சேவைகளை தொடங்குவதற்கு ஏதுவாக, வாட்சப்பிலேயே (WhatsApp) வங்கி சேவைகளை தொடங்குவதற்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதன்படி, வாட்சப் செயலி வாயிலாகவே வங்கிக் கணக்கு தொடங்குவது, வங்கிக் கணக்கில் உள்ள பேலன்ஸ் தொகை பார்ப்பது, பாஸ்வோர்ட் மாற்றுவது உள்ளிட்ட அடிப்படை வங்கி சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கு இந்த வங்கி முன்வந்துள்ளது. தொடக்கத்தில் அடிப்படை வங்கி சேவைகளை வாட்சப்பில் அறிமுகப்படுத்திவிட்டு, பின்னர் படிப்படியாக மற்ற சேவைகளும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பிட்ட சில பயனர்கள் மட்டும் வாட்சப்பிலேயே பணம் எடுப்பதற்கான கோரிக்கை விடுத்தல், ஆதார் - ஆதார் பரிவர்த்தனை, பான் நம்பர் அப்டேட் செய்வது உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிரடித் திட்டம்
எதிர்காலத்தில் பார்சல் புக்கிங், சம்பள கணக்கு, சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு தொடங்குவது, சம்பளம் வழங்குவது போன்ற சேவைகளையும் வாட்சப் வாயிலாகவே மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறுகின்றனர்.
மேலும் படிக்க...