இந்தியாவில் இப்போது நிறைய நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. ஒரு ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய் என புதிய மாடல்களில் நாணயங்கள் உள்ளன. இதில் 10 ரூபாய் நாணயங்களையும் ஒரு ரூபாய் நாணயங்களையும் நிறைய இடங்களில் வாங்க மறுக்கின்றனர். இவை செல்லாத நாணயங்கள் என்று நினைக்கின்றனர்.
செல்லுமா, செல்லாதா?
உண்மையில் ஒரு ரூபாய் நாணயமும், 10 ரூபாய் நாணயமும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் நாணயங்களாகும். ரிசர்வ் வங்கியே இதுகுறித்து பலமுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இவற்றை வாங்க மறுக்கக்கூடாது எனவும் எச்சரித்துள்ளது.
கடைகளில் வாங்க மறுப்பு
நிறைய மளிகைக் கடைகளிலும், சிறிய சிறிய கடைகளிலும் ஒரு ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கின்றனர். இதனால் இவை செல்லாதவையாக மாறிவிட்டதோ என்று நினைத்து நிறையப் பேர் இந்த நாணயங்களைப் பயன்படுத்தாமல் வீட்டிலேயே வைத்து விடுகின்றனர். இதனால் நாணயங்களின் புழக்கமும் குறைந்து போகிறது.
தபால் நிலையத்தில் மாற்றலாம் (To Change in Post office)
ஒருவேளை உங்களிடம் ஒரு ரூபாய் நாணயங்கள் இருந்தால், அதை யாராவது வாங்க மறுத்தால் நீங்கள் அவற்றை தபால் நிலையங்களில் சுலபமாக மாற்றலாம். உங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்துக்குச் சென்று இவற்றை டெபாசிட் செய்யலாம். அல்லது ஸ்டாம்ப் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை வாங்கிக் கொள்ளலாம்.
விழிப்புணர்வு (Awareness)
ஒரு ரூபாய் நாணயமும், 10 ரூபாய் நாணயமும் செல்லுபடியாகும் என்று அரசு தரப்பிலும் நிறைய முறை அறிவிப்புகள் வந்துள்ளன. ஆனால் பொதுமக்களிடையே இதற்கான விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. சொல்லப்போனால் பேருந்துகளில் கூட சிலர் இந்த நாணயங்களை வாங்க மறுப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க
1,000 ரூபாய் முதல் 14 இலட்சம் வரை: அருமையான அஞ்சலகத் திட்டம்!
ரிசர்வ் வங்கி ஆளுநரின் சம்பளம் இவ்வளவா? வெளியானது சம்பளப் பட்டியல்!