சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 3 February, 2023 11:38 AM IST
Aadhar card
Aadhar card

சிம் கார்டு, பான் கார்டு, மின் இணைப்பு, வங்கிக் கணக்கு, ரேஷன் கார்டு போன்ற விஷயங்களுக்கு ஆதார் கார்டை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் கார்டை இணைக்காவிட்டால் அரசின் உதவிகள் கிடைக்காமல் போகும். மிக முக்கியமாக வாக்காளர் அடையாள அட்டையிலும் ஆதார் கார்டு இணைக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டையும் இணைப்பதில் உள்ள முக்கியத்துவம் குறித்து மத்திய அரசு தற்போது தகவல் தெரிவித்துள்ளது.

ஆதார் அட்டை (Aadhar card)

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் நேற்று (பிப்ரவரி 2) ஆதார் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு பங்குதாரர்கள் இதில் பங்கேற்கிறார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “தேர்தல் பதிவு அலுவலர், வாக்குப்பதிவின் போது பல்வேறு ஆவணங்களை சரிபார்த்து ஆட்சேபனைகள் இருந்தால் அதற்கு தீர்வு காண்கிறார்.

தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) சட்டம், 2021, வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை அங்கீகரிக்கும் நோக்கங்களுக்காக தேர்தல் பதிவு அதிகாரியும் ஆதார் எண்ணைக் கோரலாம் என்று கூறப்படுகிறது. எனவே, வாக்காளர் பட்டியலை சீர்படுத்தும் நோக்கங்களுக்காக அங்கீகாரம் மற்றும் அடையாளம் காணும் பல ஆவணங்களில் ஆதார் முதன்மையானதாக திகழ்கிறது” என்றார். மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யப்பட்ட தரவுகளின் படி, 1.1.2023 அன்று மொத்தம் 94,50,25,694 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார். இந்தியாவில் போலி வாக்காளர்களின் எண்ணிக்கை சமீப காலங்களாக அதிகரித்துள்ளது.

இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையும் இணைக்க இந்தியத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது. நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி நடந்துவரும் நிலையில், இப்பணிகளை வருகின்ற 2023 மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்கும் வகையில் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. எனினும், தற்போதைய நிலையில் பான் கார்டு போல, ஆதார் கார்டுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது கட்டாயமாக்கப்படவில்லை.

மேலும் படிக்க

மீன் வளர்ப்புக்கு ரூ.30,000 மானியம்: உடனே விண்ணப்பிக்கவும்!

வேலையை விட்டுப் போனதும், PF கணக்கில் இந்த தவறை செய்யாதிங்கள்: நஷ்டம் உங்களுக்கு தான்!

English Summary: Aadhaar card for everything now: Central government information!
Published on: 03 February 2023, 11:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now