ஆதார் கார்டை வழங்கும் UIDAI அமைப்பு, ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தவறுகளைத் திருத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. பெரும்பாலான தவறுகள் பெயர் மற்றும் முகவரியில் மட்டுமே வருகின்றன. ஆதார் கார்டில் ஏற்படும் தகவல்களால், பல நேரங்களில் மக்கள் மோசடி செய்பவர்களின் வலையில் சிக்கிவிடுகின்றனர். ஆதார் கார்டில் உள்ள தவறுகளைத் திருத்த அதிக கட்டணம் செலுத்தவும் செய்கின்றனர்.
பயோமெட்ரிக் அப்டேட் (Biometric Update)
இதுபோன்ற சூழ்நிலையில், ஆதாரில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் போன்ற விவரங்களில் உள்ள தவறுகளைத் திருத்த 50 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது தவிர, ஆதார் அட்டை வைத்திருப்பவர் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய ரூ.100 மட்டுமே செலுத்த வேண்டும். நீங்கள் ஆதார் அப்டேட் செய்யச் செல்லும் மையத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் https://resident.uidai.gov.in/file-complaint என்ற வெப்சைட்டில் சென்று நீங்கள் புகார் செய்யலாம்.
நீங்கள் ஓரளவுக்கு ஸ்மார்ட்போனைக் கையாளத் தெரிந்தவராக இருந்தால் வீட்டிலிருந்தபடியே ஆதார் எண்ணை ஆன்லைனில் புதுப்பிக்கலாம். பயோமெட்ரிக் புதுப்பித்தலுக்கு நீங்கள் ஆதார் சேவை மையத்திற்குத்தான் செல்ல வேண்டும். வேறு வழி இல்லை. அரசு சேவை மையங்கள் மட்டுமல்லாமல் தனியார் இ-சேவை மையங்களிலும் ஆதார் அப்டேட் செய்யலாம். ஆனால் அங்கும் சில அப்டேட்களை நீங்கள் செய்ய முடியாது.
ஆதார் கார்டில் உள்ள அப்டேட்களை திருத்தம் செய்ய ஆதார் சேவை மையத்துக்குச் செல்வதில் சிலருக்கு சிரமம் இருக்கலாம். அங்கே வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். அப்போது நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் அப்டேட் செய்துகொள்ளலாம். ஆனால், மொபைல் நம்பர், பயோமெட்ரிக் அப்டேட்களுக்கு நீங்களே திருத்தம் செய்ய முடியாது. அதற்கான கட்டணத்தைச் செலுத்தி அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தில் அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.
மேலும் படிக்க
அரசுப் பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் அகவிலைப்படி உயர்வு: அடுத்தடுத்து வரும் நற்செய்தி!
தினமும் 7 ரூபாய் முதலீடு செய்தால் மாதந்தோறும் 5000 ரூபாய் பென்சன்!