பணப்பரிமாற்றங்களுக்கு பான் அட்டை எண் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கட்டுப்பாட்டில் சிலத் தளர்வுகளை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பான் எண் தளர்வுகள் குறித்த அறிவிப்புகளுக்கு, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு சில முக்கியமான பணப் பரிமாற்றங்களுக்குப் பான் கார்டு-ஐ ஆதாரமாகச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் நிலையில், ஆதார் அட்டை காட்டுவதன் மூலம் இதைச் செய்லப்படுத்த அனுமதி அளிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. நிதி பரிமாற்றங்கள் இதன் மூலம் நிதி பரிமாற்றங்களைச் செயல்படுத்தும் நிதி நிறுவனங்கள் அனைத்து இப்புதிய மாற்றத்தை அறிவிப்புக் கொண்டு வந்த பின்பு உடனடியாக நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இல்லாவிட்டாலும்
இதன் மூலம் பான் கார்டு இல்லாதவர்கள் கூட ஆதார் அட்டை கொண்டு தேவையான நிதி பரிமாற்றங்களைச் செய்துகொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கி கணக்குகள் பெரும்பாலான வங்கி கணக்குகள் ஆதார் எண் உடன் இணைக்கப்பட்டுள்ளதால், பான் எண் நிதி பரிமாற்றங்களுக்கான தேவையில்லை என்று வங்கிகள் அரசிடம் விளக்கம் கூறி தளர்வுகளை அளிப்பதற்கான கோரிக்கையை வைத்துள்ளது.
டிடிஎஸ் பிரச்னை
வருமான வரிச் சட்டம் 206AA தற்போது பான் எண் வழங்கப்படாவிட்டால் வருமான வரிச் சட்டத்தின் 206AA பிரிவின்படி, பரிவர்த்தனைக்கு 20 சதவீதம் டிடிஎஸ் விதிக்கப்படும், இது ஒருவருடைய வருமான வரி வரம்பு குறைவாக இருந்தாலும் கூட 20 சதவீதம் வரி கழிக்கப்படுகிறது.
தனிநபர் வங்கி கணக்கு தனிநபர்களைப் பொறுத்தவரையில், கிட்டத்தட்ட எல்லா வங்கிக் கணக்குகளும் ஏற்கனவே ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும், வருமான வரிச் சட்டத்தின் 139A(5E) பிரிவின் கீழ், குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்குப் பான் எண்ணுக்குப் பதிலாக ஆதாரை மேற்கோள் காட்ட அனுமதிக்கிறது என வங்கி அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விளக்கம்
இந்த நிலையில் மத்திய அரசின் பான் - ஆதார் கட்டாயம் மற்றும் தளர்வு குறித்துப் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் விளக்கம் மற்றும் அறிவிப்புகள் மூலம் தனிநபர் வரி செலுத்துவோருக்குப் பயனளிக்கும்.
மேலும் படிக்க...
ரயில்வே தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்ட 3வயது குழந்தை - அமெரிக்காவில் கொடூரம்!
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38%மாக உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!