Others

Saturday, 26 November 2022 10:59 PM

Aadhar corrections

ஆதார் என்பது 12 இலக்க எண் கொண்ட ஒரு அடையாள அட்டையாகும். இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு அவசியம். ஆதார் கார்டு இல்லாமல் இந்தியாவில் எதுவும் கிடைக்காது என்ற நிலைமை வந்துவிட்டது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல், சிம் கார்டு, வங்கிக் கணக்கு, பான் கார்டு போன்ற பல்வேறு விஷயங்களில் இணைக்கப்பட்டு தனிநபர் தகவல் கொண்ட மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது.

ஆதார் அட்டை (Aadhar card)

ஆதார் கார்டில் நீங்கள் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால் ஆதார் சேவை மையத்துக்கு நேரடியாகச் சென்றே அப்டேட் செய்ய முடியும். அங்கு சில நேரம் மணிக் கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சிரமமும் இருக்கும். ஆனால், ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்யும் வசதி வந்த பிறகு பயனாளிகள் தாங்களாவே வீட்டில் இருந்த படியே ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்து கொள்ளலாம். ஆனால் புகைப்படம் சில விஷயங்களை ஆதார் சேவை மையத்தில்தான் அப்டேட் செய்ய முடியும்.

வீடு தேடி வரும் சேவை

ஆதார் கார்டுதாரர்களுக்கு வீட்டிலேயே சேவைகளை வழங்க புதிய வசதியை ஆதார் அமைப்பு (UIDAI) கொண்டுவந்துள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் தங்களுடைய தொலைபேசி எண், முகவரி, பெயர் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை எளிதாக மாற்றலாம். இதனால் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள், அருகிலுள்ள ஆதார் சேவை மையங்களுக்குச் சென்று அப்டேட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

ஆதார் அப்டேட்டை எளிதாக மேற்கொள்ள ’இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்’ வங்கியில் பணிபுரியும் சுமார் தபால்காரர்களுக்கு ஆதார் அமைப்பு பயிற்சி அளிக்கிறது. இந்த தபால்காரர்கள் பயனாளிகளின் வீட்டு வாசலில் ஆதார் புதுப்பிப்பு சேவைகளை வழங்குவார்கள். மொத்தம் 1.5 லட்சம் தபால்காரர்கள் இரண்டு தனித்தனி கட்டங்களில் பயிற்சி பெறுகிறார்கள். ஆதார் திட்டத்தில் இன்னும் பதிவு செய்யப்படாத தனிநபர்களுக்கான புதிய ஆதார் அட்டைகளை உருவாக்கவும் தபால்காரர்கள் உதவி செய்வார்கள்.

வீட்டிற்கே வந்து சேவை வழங்குவதற்காக தபால்காரர்களுக்கு டிஜிட்டல் கேட்ஜெட், லேப்டாப் உள்ளிட்ட உபகரணங்கள் அடங்கிய ஆதார் கிட் வழங்கப்படும். அட்டைதாரர்களின் விவரங்களை புதுப்பிப்பதற்கு தபால்காரர்கள் இந்தக் கருவிகளைப் பயன்படுத்தலாம். தபால்காரர்கள் குழந்தைகளுக்கான ஆதார் அட்டைகளையும் உருவாக்கித் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஏனெனில் அனைவராலும் ஆன்லைன் மூலமாக ஆதார் அப்டேட் செய்துவிட முடியாது. வயதானர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள் போன்றோருக்கு இச்சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

தமிழகத்தில் அகவிலைப்படி உயர்வு எப்போது? அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு!

விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)