ஆதார் கார்டு என்பது இந்தியர்கள் அனைவருக்கும் மிக முக்கியமான அடையாள ஆவணமாகும். இது வெறும் அடையாள அட்டை மட்டுமல்ல; வங்கிக் கணக்கு, சிம் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட பல்வேறு பணம் சார்ந்த விஷயங்களில் ஆதார் கார்டு இணைக்கப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் அவசியமாகும். இப்படிப்பட்ட மிக முக்கியமான ஆதார் கார்டு அனைவருக்கும் இருக்க வேண்டும்.
ஆதார் அட்டை (Aadhar Card)
குழந்தைகளுக்கு ஆதார் எடுப்பதில் சிரமம் இருக்கிறது. இதற்கு தீர்வு காண தமிழக அரசின் ஒரு திட்டம் உள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வீட்டுக்கே வந்து ஆதார் பதிவு செய்யும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டில் இருந்தபடியே ஆதார் எடுக்கலாம். தமிழக அரசு செயல்படுத்தி வரும் இத்திட்டம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். பதிவு செய்த குழந்தைகளின் பயோ மெட்ரிக் விவரங்களை ஆதார் அதிகாரிகள் வீடுகளுக்குச் சென்று சேகரிப்பார்கள்.
வீட்டு வாசலில் ஆதார் பதிவுத் திட்டம் தமிழக அரசால் 2018 டிசம்பர் மாதத்தில்தான் கொண்டுவரப்பட்டது. குழந்தைகளுக்கான இந்த ஆதார் பதிவு அங்கன்வாடி பணியாளர்களை ஆதார் பதிவு செய்யும் பணியில் ஈடுபடுத்த உதவுவதோடு, ஆதார் பதிவை மேலும் பிரபலப்படுத்தும் என்று தமிழக அரசு கூறுகிறது.
குழந்தைகளுக்கான வீட்டு வாசலில் ஆதார் பதிவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள 434 குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலகங்களில் மொத்தம் 1,302 ஆதார் கருவிகள் அமைக்கப்படும் என்று திட்டம் தொடங்கப்பட்டபோது தமிழக அரசு கூறியிருந்தது. அதன்படி இத்திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.
மேலும் படிக்க
ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு: ஆகஸ்ட் 1 இல் முக்கிய ஆலோசனை!