அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 30 July, 2022 9:40 AM IST
Aadhar Card - Voter Id Link

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கும் நிலையில், இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்த உள்ளார். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகள் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்குகிறது. இந்தப் பணிகளை 2023 மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்கும் வகையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதற்கென 6 பி என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் அட்டை - ஆதார் (Voter id - Aadhar)

ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறும் ஆலோசனையில், அன்றைய தினம் தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையிலும், தொடர்ந்து, மாவட்டங்களில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமையிலும் இந்த ஆலோசனை கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, “வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் மாபெரும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்குகிறது. இதற்கு அரசியல் கட்சிகளின் முழு ஒத்துழைப்பும் அவசியம் என்பதால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

வாக்காளர் பட்டியல் - ஆதார் எண் இணைப்பு பணியை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது குறித்து இக்கூட்டத்தில் கட்சிகளின் ஆலோசனைகள் பெறப்படும். வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்படும். இப்பணிகள் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த முறை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. வழக்கமாக, 18 வயது பூர்த்தியான பிறகே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியும். ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு இப்பணி மேற்கொள்ளப்படும்.

விதிமுறைகளில் திருத்தம் (Amendment of Regulations)

அதன்படி ஜனவரி 1ஆம் தேதிக்குள் 18 வயது பூர்த்தியடைபவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். ஒருவேளை, ஜனவரி 2 ஆம் தேதி 18 வயது பூர்த்தியடைந்தால் கூட, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு அவர் ஓராண்டு காத்திருக்க வேண்டும். இதை தவிர்க்க, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகளை ஒவ்வொரு காலாண்டிலும் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தேர்தல் ஆணைய விதிமுறைகளில் திருத்தம் கெண்டுவரப்படுகிறது. இந்த புதிய நடைமுறை குறித்தும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.

அக்டோபரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும். 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டங்களும் நடைபெறும் என்பதால், அக்கூட்டத்தில் திருத்தப் பணிகள் குறித்து உரிய ஆலோசனைகள் பெறப்படும். திருத்தப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

மேலும் படிக்க

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: இனி கன்ஃபார்ம் டிக்கெட் ஈஸியா கிடைக்கும்!

சம்பளம் vs வருமானம்: இரண்டிற்கும் என்ன வேறுபாடு!

English Summary: Aadhaar-Voter Card Link: Important Consultation on August 1!
Published on: 30 July 2022, 09:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now