Others

Tuesday, 31 January 2023 02:48 PM , by: R. Balakrishnan

Adal Pension Yojana

நரேந்திர மோடி அரசின் லட்சியத் திட்டமான அடல் பென்சன் யோஜனாவில் நீங்களும் முதலீடு செய்திருந்தால் அது தொடர்பாக புதிய அப்டேட் வந்துள்ளது. புதிய அப்டேட்டின் கீழ், அடல் பென்சன் யோஜனா திட்டத்தின் கீழ் 5 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். இந்தத் தகவலை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக PFRDA தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அடல் பென்சன் யோஜனா (Adal Pension Yojana)

2022ஆம் ஆண்டில் மட்டும் அடல் பென்சன் திட்டத்தில் 1.25 கோடி புதிய பதிவுகள் இருந்துள்ளன. அதேசமயம் 2021ஆம் ஆண்டில் 92 லட்சம் புதிய பதிவுகள் மட்டுமே இருந்தது. மத்திய அரசு நிர்ணயித்த இலக்கை இதுவரை 29 வங்கிகள் தாண்டியுள்ளதாக பென்சன் PFRDA தெரிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளான பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் வங்கி ஆகியவை தங்களின் ஆண்டு இலக்குகளை எட்டியுள்ளன. அதே நேரத்தில் பிராந்திய கிராமப்புற வங்கிகள் (RRB) பிரிவில் 21 வங்கிகள் தங்களுடைய இலக்குகளை எட்டியுள்ளன.

பிராந்திய கிராமப்புற வங்கிகளில் அதிகபட்ச பதிவுகள் ஜார்கண்ட் மாநில கிராமின் வங்கி, விதர்பா கொங்கன் கிராமின் வங்கி மற்றும் பரோடா UP வங்கி ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ளன. PFRDA அறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையில் பேசிய பிறகு PFRDA இந்த திட்டத்தை அதிகபட்சமாக பரப்புவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்த பிரச்சாரத்தின் மூலம், பெண்கள் அதிகமாக பதிவு செய்து வருகின்றன. பெண் பதிவுகளின் விகிதம் 38 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க

இனி கவலையே இல்லை: எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கி கொள்ளலாம்!

1,000 ரூபாய் பொங்கல் பரிசு வாங்காதவர்கள் இத்தனை நபர்களா? கூட்டுறவுத்துறை அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)