அம்மா இருசக்கர வாகனம் திட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அம்மா இரு சக்கர வாகனம் திட்டத்தை திமுக அரசு ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சில திட்டங்களை மறுசீரமைக்க திமுக அரசு திட்டம்தீட்டி வருகிறது.
வேலைக்கு போகும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா அவர்கள் அறிமுகப்படுத்தினார். கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனத்தின் விலையில் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் 50 சதவீதம் அல்லது ரூ.25,000 மானியம் வழங்கப்பட்டு வந்தது.
அம்மா இருசக்கர வாகனம் திட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்ச் 2020 வரை இந்த திட்டத்தின் கீழ் 2.07 லட்சம் வாகனங்கள் ரூ.468.75 கோடி செலவில் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்தை திமுக அரசு கைவிட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
மாநகர பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளதால் வேலைக்கு செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பாக அமையும் என்பதாலும் இருசக்கர வாகன திட்டம் ரத்து செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மாநகர பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டத்தின் கீழ், 703 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக மடிக்கணிகள் வழங்கும் முந்தைய அரசு திட்டத்திற்கு பதிலாக மாணவர்களுக்கு 670 கோடி ரூபாய் மதிப்பில் டேப் வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களை சார்ந்த 5.6 மில்லியன் ஏழை எளிய குடும்பங்கள் நலனுக்காக முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் சரிபார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க:
வீடுகளில் சூரிய மின்சக்தி அமைக்க மானியம் அறிவிப்பு: மத்திய அமைச்சர் தகவல்
PMJDY: பல்வேறு நன்மைகளுடன் ரூ. 2 லட்சம் காப்பீடு தரும் ஜன் தன் கணக்கு திட்டம்!!