இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 1 August, 2022 10:11 AM IST

பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள், ஓய்வு பெறும் போது, லாயல்டி-கம்-லைஃப் மூலம் பணியாளர் ரூ.50,000 வரை பலன் பெறலாம். லாயல்டி-கம்-லைஃப் நன்மையின் கீழ் ரூ. 5,000 வரை அடிப்படை சம்பளம் உள்ளவர்கள் ரூ.30,000 பலனைப் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பல முக்கியமான விஷயங்கள் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை.வேலை மாறினாலும் ஒரே எண்ணில் பணியாற்ற வலியுறுத்தப்படுகிறது.

இபிஎஃப்ஓ

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) உறுப்பினர்களுக்கு பிஎஃப் கணக்கு தொடர்பான பல முக்கியமான விஷயங்கள் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை, இதனால் அவர்கள் சில நன்மைகளை பெற்றுக்கொள்ளமுடியாமல் போய்விடுகிறது. இடிஎல்ஐ திட்டத்தின் கீழ் 7 லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம், வருமான வரி விலக்கு போன்ற விதிகள் பெரும்பாலான உறுப்பினர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

ரூ.50,000

இந்த சலுகைகள் மட்டுமின்றி,லாயல்டி-கம்-லைஃப் போன்றவற்றின் நன்மைகளும் கிடைக்கினற்ன. இதன் மூலம் பணியாளர் ஓய்வு பெறும் போது ரூ.50,000 வரை பலன் பெறலாம். மேலும் அனைத்து இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களும் பழைய வேலையிலிருந்து புதிய வேளைக்கு மாறிய பிறகும், அதே இபிஎஃப் கணக்கில் தொடர்ந்து செயலாற்ற வலியுறுத்தப்படுகிறது.

உறுப்பினர்கள் 20 வருடங்கள் தொடர்ந்து ஒரே கணக்கில் பங்களித்த பிறகு, அவர்கள் லாயல்டி-கம்-லைஃப் பலன்களைப் பெறலாம். இதுகுறித்து நிபுணர் குழு கூறியதாவது:- இபிஎஃப்கணக்கில் 20 ஆண்டுகளாக கணக்கு வைத்திருப்பவர்களுக்கு லாயல்டி-கம்-லைஃபின் பலனை நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

லாயல்டி-கம்-லைஃப்

இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தகுதி பெற்ற ஒருவருக்கு கூடுதல் போனஸாக ரூ.50,000 வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.லாயல்டி-கம்-லைஃப் நன்மையின் கீழ் ரூ. 5,000 வரை அடிப்படை சம்பளம் உள்ளவர்கள் ரூ.30,000 பலனைப் பெறுவார்கள். அடிப்படை சம்பளம் ரூ.5,001 முதல் ரூ.10,000 வரை உள்ளவர்களுக்கு நன்மை கிடைக்கிறது.

நிபந்தனை

இந்த போனஸ் தொகையை நீங்கள் பெற்றுக்கொள்ள செய்யவேண்டியது வேலை மாறினாலும் நீங்கள் உங்கள் பழைய கணக்கிலேயே தொடர வேண்டும். இதுகுறித்து உங்கள் பழைய முதலாளி மற்றும் தற்போதைய முதலாளியிடம் விவரத்தை தெரிவிக்க வேண்டும். மேலும் பணியில் இருக்கும்போது பிஎஃப்-ஐ திரும்பப் பெறாமல் இருப்பது நல்லது.

மேலும் படிக்க...

ஒரு சரக்கு வாங்கினால், 2 பாட்டில் இலவசம் - குஷியில் குடிமகன்கள்!

கூழ் காய்ச்சும் போது வலிப்பு -பாத்திரத்தில் விழுந்து இளைஞர் மரணம்!

English Summary: Are you an EPF account holder? Bonus up to Rs.50,000!
Published on: 01 August 2022, 10:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now