நீங்கள் புதிதாக வீடு வாங்கப் போகிறீர்கள் என்றால், உங்களுக்கு வீட்டுக் கடன் தேவையென்றால் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் பற்றிய தகவல்கள் உங்களுக்காக உள்ளன. சமீபத்தில் பேங்க் ஆஃப் பரோடா வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தில் சலுகையை அறிவித்தது. மேலும் பல பொதுத்துறை வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளன.
வீட்டுக் கடன் (House loan)
பேங்க் ஆஃப் பரோடா வங்கி வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. ஆண்டுக்கு 8.25 சதவீத வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனை வழங்குகிறது. பேங்க் ஆஃப் பரோடாவைத் தவிர பல முன்னணி வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகின்றன.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சமீபத்தில் வீட்டுக் கடன்களை ஆண்டுக்கு 8.55 சதவீத வட்டியிலும், 0.35% செயலாக்கக் கட்டணத்திலும் வழங்குவதாகக் கூறியிருந்தது. அதேபோல, கோடக் மஹிந்திரா வங்கி ஆண்டுக்கு 7.50% வட்டி விகிதத்தில் கடன் வழங்குகிறது. இதற்கு 0.50% செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும்.
சிட்டி வங்கி ஆண்டுக்கு 6.65% வட்டி விகிதத்தில் கடன் வழங்குகிறது. இதில் 10,000 செயலாக்கக் கட்டணம் தனியாக வசூலிக்கப்படுகிறது. மேலும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆண்டுக்கு 8.25% வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனை வழங்குகிறது.
இந்த வங்கிகளைத் தவிர, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆண்டுக்கு 7.20% முதல் 7.65% வட்டியில் கடன் தருவதாகக் கூறியுள்ளது. இதற்கு 20,000 ரூபாய் செயலாக்கக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதேபோல, பேங்க் ஆஃப் இந்தியா வங்கி ஆண்டுக்கு 7.30% வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனை வழங்குகிறது.
HDFC வங்கி ஆண்டுக்கு 8.60% வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனை வழங்குகிறது. இதில் 0.5% அல்லது ரூ.3,000 ஆகிய இரண்டில் எது அதிகமாக உள்ளது அந்தத் தொகை செயலாக்கக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆக்சிஸ் வங்கி ஆண்டுக்கு 7.60% வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனை வழங்குகிறது. இவ்வங்கியில் செயலாக்க கட்டணமாக ரூ.10,000 வசூலிக்கப்படும்.
மேலும் படிக்க
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: சம்பளத்தை உயர்த்தும் அரசு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பரான திட்டம்: விண்ணப்பிக்க மார்ச் 2023 தான் கடைசி!