Others

Thursday, 15 December 2022 08:05 AM , by: R. Balakrishnan

Save Money -PPF

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது அவசியமாகிறது. பணத்தைச் சேமித்து வைப்பதைத் தவிர்த்து அதை இரட்டிப்பாகுவது தான் புத்திசாலித்தனம். அப்படிப் பணத்தைப் பெருக்குவதற்கு நமது அஞ்சல் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு சிறப்பான திட்டம் தான் பிபிஎப் அல்லது பொது வருங்கால வைப்புநிதி திட்டம். இந்த திட்டம் மத்திய அரசால் 1968ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கமே தனிநபர் அனைவரும் சேமிப்பு செய்ய வேண்டும் என்பதாகும். பிபிஎப் திட்டம் அதிகம் வட்டி வழங்கக் கூடிய திட்டமாகும். இந்த திட்டத்தில் கிடைக்கும் வருவாய்க்கு வருமான வரி விலக்கும் உண்டு.

திட்டத்திற்கான தகுதி 

  • இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
  • ஒருவர் ஒரு கணக்கு மட்டுமே வைத்திருக்க முடியும்.
  • 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் பெற்றோர் மேற்பார்வையில் இயங்கும் கூட்டு கணக்காக வைத்திருக்க முடியும்.
    வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் கணக்கு தொடங்க இயலாது
  • இந்த திட்டத்தில் சேர வயது வரம்பு கிடையாது.

எங்கெல்லாம் கணக்கு துவங்கலாம்

இந்த கணக்கைத் தலைமை தபால் நிலையங்கள், தேசியமாக்கப்பட்ட வங்கிகள், சில தனியார் வங்கிகளில் தொடங்கலாம்.

தேவையான ஆவணங்கள்

  • சுயவிவரங்கள் நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம்
  • பான் கார்டு
  • ஆதார் கார்டு
  • இரண்டு புகைப்படம்
  • முகவரி சான்று மற்றும் கையொப்பமிட்ட சான்று ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும்

சேமிப்பு விவரம்

இத்திட்டத்தின் கால அளவான 15 ஆண்டுகளுக்குத் தனிநபர் ஒருவர் ரூ.500 முதல் ரூ.1.50லட்சம் வரை சேமிக்கலாம். இந்த திட்டத்தில் சேமிக்கும் பணத்திற்கு ஆண்டிற்கு 1.5 லட்சம் வரை வரிவிலக்கு உண்டு.

பணம் செலுத்தும் கால அளவு

இந்த திட்டத்தில் மாதம், மூன்று மாதம், ஆறு மாதம், வருடத்திற்கு ஒருமுறை ஆகிய கால அளவுகளில் செலுத்தலாம். வருடத்திற்கு ஒரு முறை பணம் செலுத்தும் போது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 5 தேதிக்குள் செலுத்தினால், வட்டி விகிதம் சரியாகக் கணக்கில் சேரும். பிபிஎப் கணக்கானது அரசாங்க வங்கி சேமிப்பு சட்டம் 1873 -ன் கீழ் பணத்தை எந்த நீதிமன்றத்தாலும் அல்லது நீதிமன்ற உத்தரவு மூலமும் பறிமுதல் செய்ய முடியாது. இத்திட்டத்தில் மட்டும் தான் முதலீடு செய்பவருக்கு மட்டுமே பணம் சொந்தம்.

ஒரு நீண்ட கால திட்டமாகும். 15 ஆண்டுகள் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கை முடிக்க விரும்பினால் முடித்துக் கொள்ளலாம். இந்த திட்டம் முதிர்ச்சி பெறும் போது முழு தொகைக்கும் வரிவிலக்கு உண்டு. குறிப்பாக நீங்கள் வங்கிகளில் நீண்டகாலத் திட்டமான Fixed deposit-ல் பணம் செலுத்திருந்தால் அதற்கு 20% வரி கட்ட வேண்டும். இதனால் நீண்டகால முதலீட்டிற்கு பிபிஎப் கணக்கு சிறந்ததாகும்.

வட்டி

பிபிஎப் திட்டத்தில் ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை மத்திய நிதித்துறையால் வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படும். தற்போது இந்த பிபிஎப் திட்டத்திற்கு (2020 ஜனவரி-மார்ச் ) 7.10 சதவீதம் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த வட்டி விகிதமே உள்ளது.

நீட்டிப்பு

இந்த முறைக்கு நீங்கள் எந்தவொரு படிவத்தையும் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. முழு தொகையும் பிபிஎப் கணக்கிலிருந்தால் அத்தொகைக்கு வட்டி வருவாய் கிடைத்துக் கொண்டு தான் இருக்கும். தேவைப்படும் போது குறிப்பிட்ட பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதில் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே இத்திட்டத்திலிருந்து பணத்தினை எடுக்க முடியும்.

மேலும் படிக்க

PF பணத்தை இப்படி எடுப்பது தான் நல்லது: தெரியுமா உங்களுக்கு?

மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் சலுகைகள்: பென்சன் முதல் இலவசங்கள் வரை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)