Others

Tuesday, 30 November 2021 08:38 AM , by: Elavarse Sivakumar

சவூதி அரேபியாவில் ரோபோக்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில், ரோபோவுக்கு முகம் வழங்க முன்வருவோருக்கு ரூ.1.5 கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எளிதில் கோடி ரூபாய் சம்பாதிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஊதியம் (Salary)

ஓடி ஓடி உழைத்தாலும், அதிகளவில் சம்பாதிக்க முடியவில்லையே என்று கவலைப்படுபவரா நீங்கள்? அப்படியே சம்பாதித்தாலும் அதிகமாகச் சேர்த்து வைக்க முடியவில்லையே என வருந்துபவரா நீங்கள்? அப்படியானால் இந்தத் தகவல் உங்களுக்கானது.

மனிதர்களின் கண்டுபிடிப்புகளில் முக்கியமானதும், பெருமிதம் கொள்ளக்கூடியதும் எதுவென்றால், அதில் ரோபோக்கள்தான் முதலிடம் பிடிக்கும்.

மனித ரோபோ

குறிப்பாக மனிதர்களை ஒத்த ரோபோக்கள் மனிதர்களையேத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு சாதுர்யமானவையாகத் திகழ்கின்றன. 'எந்திரன்' படத்தின் மூலம் மனித ரோபோக்கள் மக்களிடத்தில் அதிகமாகப் பிரபலமானது.

எனவே இந்த மனித ரோபோக்களை கவுரவிக்கும் வகையில், சவூதி அரேபியாவில் 'சோபியா' என்ற ரோபோவிற்கு முதன் முதலாகக் குடியுரிமை அளிக்கப்பட்டது. இதன்மூலம் ரோபோவின் முக்கியத்துவம், பயன்பாடு குறித்து அறியமுடிகிறது.

ரூ.1.5 கோடி

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ரோபோத் தயாரிக்கும் நிறுவனமான PROMOBOT, மனித ரோபோக்களை தயாரிக்க மனிதர்களின் முக மாதிரிகளை கொடுத்தால் ரூ.1.5 கோடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.பழகிய முகங்களின் வடிவங்களை ரோபோவிற்கு பயன்படுத்தினால் அதனைப் பயன்படுத்துவோருக்கு வசதியாக இருக்கும்.அதுவே அறிமுகமில்லாத முகங்களாக இருந்தால் அது அவர்களுக்கு அவர்களுக்கு வசதியாக இருக்காது எனக் கருதுகிறது இந்த நிறுவனம்.

நிபந்தனைகள் (conditions)

  • இதற்கு முக மாதிரிகளைக் கொடுக்க சில நிபந்தனைகள் உள்ளன.

    அதாவது, முக மாதிரியை கொடுக்கும் நபர் 25 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

  • பின்னர் அவர்களின் முகம் மற்றும் உடலின் 3D மாதிரிகள் எடுக்கப்படும், அவரது குரலை அந்த ரோபோவிற்கு பதிவு செய்ய முக மாதிரியை கொடுக்கும் நபர் குறைந்தது 100 மணி நேரம் வார்த்தைகளைக் கூற வேண்டும்.

  • மேலும் அவர்கள் முகத்தின் மாதிரியை ரோபோவிற்கு கொடுக்க வரம்பற்ற காலத்திற்கும் முக மாதிரியை பயன்படுத்தலாம் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

  • இதன் பின்னரேத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு ரூ.1.5 கோடி வழங்கப்படும்.

மேலும் படிக்க...

தமிழக வனத்துறையில் ஆராய்ச்சியாளர் வேலை - விபரம் உள்ளே!

இப்படித்தான் இருக்கும் எலும்பும் தோலுமான சிங்கம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)