தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழையின் தீவிரம் அதிக இருக்கும் மற்றும் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு தீபகற்ப பகுதியில் நிலவி வரும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், உள் தமிழகம் மற்றும் கடலோர பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நேற்றைய அறிக்கையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அடுத்த 3 நாட்களுக்கு கனமழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்கக் கடலில் உருவாகிய நிலையில் அது சென்னைக்கு அருகே அரபிக் கடல் பகுதிக்கு சென்றடைந்தது. இதன் காரணமாகவே கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பரவலான மழை பெய்து வருகிறது. மேலும் ஓர் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி சென்னைக்கு அருகே நிலை கொண்டுள்ளதால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் நல்ல மழை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், வேலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே வங்கக் கடலில் மேலும் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகி சென்னைக்கு கீழே வருகிற 23 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் 24, 25 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது.
குறிப்பாக சேலம், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது.
இதனிடையே தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் வளிமண்ட மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக திருவள்ளூர், வேலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதிக பட்ச மழை பொழிவாக திருவள்ளூரில் 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திண்டுக்கல்லில் பலத்த மழை பெய்ததால், பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
K.Sakthipriya
Krishi Jagran