மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் வாகனங்களின் மூலம் ஏற்படும் மாசுகளை கண்காணிப்பதும் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகின்றன. டெல்லியில் மாசு கட்டுப்பாட்டு தர சான்றிதழ் இருந்தால் மட்டுமே பெட்ரோல் பங்குகளில் (Petrol Bunk) பெட்ரோல் நிரப்பப்படும், இல்லையென்றால் நிரப்பப்படாது என்ற நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது.
இது நடைமுறைப்படுத்துவதற்கு முன் பொது மக்களின் கருத்துகளும் கவனத்தில் வைக்கப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், இது எங்கள் அரசு கொண்டுவரும் மிகவும் முக்கியமான கொள்கையாகும். குறிப்பாக குளிர்காலத்தில் டெல்லி கடும் மாசுபாட்டை எதிர்கொள்கிறது, இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வாகனத்திற்கும் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற வேண்டும் என்ற விதியை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இது வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகையின் அளவைக் கண்டறிந்து டெல்லியில் சுத்தமான காற்று இருக்க உதவும் என குறிப்பிட்டார்.
டெல்லியில் இருக்கும் மாசுப்பாடு மற்றும் சுற்றுசூழல் சான்றிதழ் தர அறிக்கைப் பற்றி அனைவருக்கும் தெரியும். பாசுப்பாட்டில் மிகவும் மோசமான நிலைக்கொண்டிருக்கிறது டெல்லி, அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே இதனை கட்டுக்குள் கொண்டு வர வேண்டியது, அவசியமான ஒன்றாகும், புதிய விதிமுறைகளுடன், இது நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாகன உரிமையாளர்கள் தங்களின் PUC சான்றிதழ் பெட்ரோல் பங்குக்கு எடுத்து செல்ல வேண்டியது அவசியமாக்கப்படும். மாசு கட்டுப்பாட்டு வாரிய சான்றிதழ் இல்லை என்றால், அங்கேயே தரச்சான்றிதழ் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடதக்கது. பதிவு செய்யப்பட்ட மாசு கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் வாகனங்கள் இருந்து வெளியேறும் புகையின் அளவை கண்டறிய முடியும், எனவே இது நம்மை பெரிய சிரமத்திற்கு, ஆள் ஆக்காது. டெல்லியில் 10 மண்டலங்களில் 966 மாசுக்கட்டுப்பாட்டு மையங்கள் இருக்கின்றன. வாகன மாசுபாட்டை கண்காணிப்பதும், வாகனங்களில் விதிமுறைகளின்படி தகுதிச் சான்றிதழ் அளிப்பதில் அவை மும்முரமாக செயல்படுகின்றன.
பெட்ரோல் பங்குகளில் நடத்தப்படும் இந்த நடைமுறையால் டெல்லியில் காற்று மாசுபடுவது கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயல்முறை நடைமுறைப்படுத்தப்பட்ட உடன் வாகன வாசிகள், நீண்ட நேரம் வரிசையில் நின்று சிரமத்தை எதிர் கொள்ளாமல் தொழில்நுட்ப ரீதியான செயல்பாடுகள் அமல்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தொழில்நுட்பங்கள் இல்லாத பங்குகளில் வேறுவிதமான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க:
ஏர்டெல்லில் முதலீடு செய்யும் கூகுள்: நிறுவனங்களின் இலக்கு என்ன?