இன்றைய காலகட்டத்தில் வங்கிகளில் வட்டி விகிதம் அதிகமா? அஞ்சலகத்தில் வட்டி விகிதம் அதிகமா? எங்கு வட்டி விகிதம் அதிகம்? எது முதலீட்டாளர்களுக்கு அதிக நன்மையை கொடுக்கும் வாருங்கள் பார்க்கலாம். அஞ்சலகத்தில் ஜனவரி 1, 2023 முதல் வட்டி விகிதம் 7% ஆக வழங்கப்படுகின்றது. வங்கிகளில் 5 ஆண்டுகால திட்டம் எனும்போது 6.6% ஆக வட்டி கிடைக்கிறது.
அஞ்சலகத்தில் என்ன வட்டி?
அஞ்சலகத்திலும் வங்கிகளில் உள்ளதைபோல டெர்ம் டெபாசிட்கள் இருந்தாலும், காலம் என்பது 1 ஆண்டில் இருந்து தொடங்கி, 5 ஆண்டு திட்டம் வரையில் உள்ளது.
- 1 ஆண்டு டெபாசிட் - 6.6%
- 2 ஆண்டு டெபாசிட் - 6.8%
- 3 ஆண்டு டெபாசிட் - 6.9%
- 5 ஆண்டு டெபாசிட் - 7%
எஸ்பிஐ-ல் என்ன விகிதம்?
எஸ்பிஐயில் 7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான திட்டம் என்பது உள்ளது. இதற்கு 3% முதல் 7.1% வரையில் வட்டி வழங்கப்படுகின்றது. இதில் மூத்த குடிமக்கள் 50 அடிப்படை புள்ளிகள் அதிகம் வட்டியினை பெறலாம். இந்த திட்டத்திற்கு கடந்த பிப்ரவரி 15, 2023 அன்று வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டது.
- 7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 3%
- 46 நாள் முதல் 179 நாட்கள் வரையில் - 4.5%
- 180 நாள் முதல் 210 நாட்கள் வரையில் - 5.25%
- 211 நாட்கள் முதல் 1 ஆண்டுக்குள் - 5.75%
- 1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் - 6.8%
- 400 நாள் - 7.10%
- 2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் - 7%
- 3 வருடம் முதல் 5 வருடம் வரையில் - 6.5%
- 5 வருடம் முதல் 10 வருடம் வரையில் - 6.5%
எது பெஸ்ட்?
வங்கிகள் எனும்போது குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கிளைகளை கொண்டுள்ளன. அதேசமயம் அஞ்சலகங்கள் கிராமப்புற பகுதிகளில் கூட சேவையை கொடுக்கின்றன. அதோடு வங்கிகளை காட்டிலும் அஞ்சலகத்தில் வட்டி சற்றே அதிகம் எனலாம். அஞ்சலகத்தில் 5 ஆண்டு டெபாசிட் திட்டத்திற்கு 7% வட்டி கிடைக்கிறது. இதே எஸ்பிஐ-யில் 5 - 10 ஆண்டுகளுக்கே 6.5% தான் வட்டி கிடைக்கிறது. ஆக வருமான வகையில் அஞ்சலகத்திலேயே வட்டி அதிகம்.
மேலும் படிக்க
ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
PF பயனர்களுக்கு பங்களிப்புத் தொகை அளிக்கவில்லை எனில் நிறுவனங்களுக்கு அபராதம்!