பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஃபிட்மெண்ட் காரணியை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதனால்
மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 26,000 ரூபாயாக உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு
கொரோனா பிரச்சினையைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள் பெரும் விரக்தியில் இருந்தனர். ஆனால் சென்ற ஆண்டில் அகவிலைப்படியை அரசு உயர்த்தியது. கடைசியாக வெளியான அறிவிப்பில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
அடுத்த உயர்வு
வரும் ஜூலை மாதத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 முதல் 6 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான சம்பளமானது ஃபிட்மெண்ட் காரணி அடிப்படையில்தான் கணக்கிடப்படுகிறது. ஃபிட்மெண்ட் காரணி உயர்த்தப்படும்போது சம்பளமும் உயரும்.
ஃபிட்மெண்ட் காரணி
தற்போதைய நிலையில் ஃபிட்மெண்ட் காரணி 2.57 சதவீதமாக உள்ளது. அது 3.68 சதவீதம் வரையில் உயர்த்தப்பட வாய்ப்பிருக்கிறது. அவ்வாறு உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயிலிருந்து 26,000 ரூபாயாக அதிகரிக்கும். கடைசியாக அடிப்படை சம்பளம் 20217ஆம் ஆண்டில் 7000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.
சம்பளம் எவ்வளவு?
ஃபிட்மெண்ட் காரணி இப்போது 2.57 சதவீதமாக இருக்கிறது. இதில் அடிப்படை சம்பளம் 18,000 என்று வைத்துக் கணக்கிட்டால் மொத்த சம்பளம் ரூ.46,260. அதாவது, 18000 x 2.57 = 46,260
ஒருவேளை ஃபிட்மெண்ட் காரணி 3.68 சதவீதமாக உயர்த்தப்பட்டால் மொத்த சம்பளம் 95,680 ரூபாயாக அதிகரிக்கும்.அதாவது, 26000 x 3.68 = 95,680
காத்திருக்கும் ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது பணவீக்கத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்தியாவில் தற்போது பணவீக்கம் அதிகமாக இருப்பதால் அதைப் பொறுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...