முதுமலையில் 'லேன்டனா' களைச்செடிகளை பயன்படுத்தி, பழங்குடியின இளைஞர்கள், நாற்காலி உள்ளிட்ட 'பர்னிச்சர்' பொருட்களை தயாரித்து அசத்துகின்றனர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் அதிகரித்து வரும் 'லேன்டனா' போன்ற களைசெடிகளால், வன விலங்குகளுக்கான தீவனங்கள் அழிந்து வருகின்றன. இதை அவ்வப்போது அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுகின்றனர்.
ஃபர்னிச்சர் (Furniture)
இச்செடிகளை பயன்படுத்தி, தெப்பக்காடு பழங்குடி இளைஞர்கள் நாற்காலி, கட்டில் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். செடிகளை, சுடுநீரில் வேக வைத்து, அதன் தோலை நீக்கி, வெயிலில் காயவைத்து, பின் நாற்காலி, கட்டில், டிரஸ்ஸிங் சேர், சோபா உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கின்றனர்.
பழங்குடி இளைஞர் மாறன் கூறுகையில், ''15 ஆண்டுகளுக்கு முன் இப்பணியை துவங்கி இரண்டு ஆண்டுகள் தயாரித்தோம். ஐந்து ஆண்டுகளாக மீண்டும் தயாரித்து விற்கிறோம்; மிக உறுதியாகவும், நீண்ட காலம் பயன்படுத்த முடியும்,'' என்றார்.
மேலும் படிக்க
உள்நாட்டு பொருட்களை மட்டும் பயன்படுத்தினால் வேலையில்லா திண்டாட்டம் ஒழியும்: பிரதமர் மோடி!