டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் தனது பாலிசிதாரர்கள் அனைவருக்கும் போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதன்படி 861 கோடி ரூபாய் போனஸ் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம், பாலிசிதாரர்களுக்கு லாபத்தை பிரித்து போனஸ் தொகையாக வழங்குவது இது 5-து ஆண்டாகும்.
ரூ.861 கோடி
2021ஆம் நிதியாண்டில் வழங்கப்பட்ட போனஸ் தொகையை காட்டிலும் 2022ஆம் ஆண்டுக்கான போனஸ் தொகை 20% உயர்ந்துள்ளதாக டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக அனைத்து பாலிசிதாரர்களுக்கும் போனஸ் தொகைக்காக 861 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் போனஸ்
2022 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருந்தவர்கள் அனைவருமே போனஸ் தொகை பெறத் தகுதியானவர்கள் என டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்ட போனஸ் தொகை பாலிசிதாரர்களுக்கான பலன்களில் சேர்க்கப்படும் என டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சமித் உபத்யா தெரிவித்துள்ளார்.
ரூ.4,455 கோடி
இதனிடையே , டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இன்சூரன்ஸ் பிரீமியம் வாயிலான வருமானம் 2021ஆம் நிதியாண்டில் 3416 கோடி ரூபாயில் இருந்து 2022ஆம் ஆண்டில் 4455 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 30% உயர்வாகும்.
மேலும் படிக்க...