குண்டு துளைக்காத உடை, குண்டு துளைக்காத கார் என கேள்விப்பட்டிருப்போம். இப்போது பிரபல கேவியர் நிறுவனம், ஆப்பிள் போனுக்கான குண்டு துளைக்காத கவரை தயாரித்துள்ளது.
ஐபோன், பிளேஸ்டேஷன் போன்ற மின்னணு சாதனங்களை மிகுந்த ஆடம்பர பொருளாக மாற்றும் வகையில், பல்வேறு பொருட்களை தயாரித்து வரும் நிறுவனம் கேவியர். இந்நிறுவனம், ஐபோன், பிளேஸ்டேஷன் போன்றவற்றுக்கு தங்கத்தில் ஆன கவர்களை தயாரித்து வழங்குவது வழக்கம்.
குண்டு துளைக்காத கவர் (Bulletproof cover)
தற்போது இந்நிறுவனம், 'ஐபோன் 13 புரோ' மற்றும் 'ஐபோன் 13 புரோ மேக்ஸ்' ஆகிய போன்களுக்காக குண்டு துளைக்காத கவர்களை தயாரித்து உள்ளது. துப்பாக்கியால் சுட்டாலும் குண்டை இந்த போன் கவர் தடுத்துவிடும்.
இது குறித்த விளக்க வீடியோ ஒன்றையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. துப்பாக்கியால் சுடும்போது குண்டை போன் கவர் தாங்கிக் கொள்கிறது. இருப்பினும் போன் நொறுங்கி விடுகிறது. ஆனாலும், உயிர் காக்கப்பட்டுவிடும்.
விலை (Price)
இரு குண்டுகளை இந்த கவர் தாங்கும் என கூறப்பட்டுள்ளது. சரி, இந்த கவரின் விலை எவ்வளவு என்கிறீர்களா? எதற்கும் நெஞ்சை பிடித்துக்கொண்டு மேலே படியுங்கள். ஒருவேளை நீங்கள் குண்டு துளைப்பதை விட அதிக வலியை உணரக்கூடும். ஐபோன் 13 புரோ கவருடன் சேர்த்து 4.85 லட்சம் ரூபாய் ஆகிறது. ஐபோன் 13 புரோ மேக்ஸ் போனுடனான கவரின் விலை 6.08 லட்சம் ரூபாய்.
மேலும் படிக்க