Others

Friday, 05 August 2022 06:33 AM , by: R. Balakrishnan

Calculation of Allowance

ஜூலை - டிசம்பர் அரையாண்டு தொடங்கிவிட்ட நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கணக்கீடு குறித்து முக்கிய தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு (Allowance Hike)

ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தால் விலைவாசி உயருகிறது. எனவே, விலைவாசியை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என அரையாண்டுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது

மொத்த விலை பணவீக்கம் (WPI) 15.8% ஆக 30 ஆண்டு உச்சத்தில் இருக்கிறது. ஆனால், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியும், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணமும் 3% ஆகவே இருக்கிறது. மொத்த விலை பணவீக்கத்தின் அடிப்படையில் அகவிலைப்படி விகிதம் உயர்த்தப்படுமா என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி நரன்பாய் ரத்வா கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுதரி, 2022 மே மாதம் மொத்த விலை பணவீக்கம் 15.88% ஆக இருந்தது. ஆனால் ஜூன் மாதம் 15.18% ஆக குறைந்துவிட்டது. அகவிலைப்படியும், அகவிலை நிவாரணமும் சில்லறை பணவீக்கம் (AICPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படும்; மொத்த விலை பணவீக்கம் அடிப்படையில் கணக்கிடப்படாது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க

EPFO: இணையத்தில் கசிந்த தகவல்கள்: பென்சனர்கள் அதிர்ச்சி!

ஓய்வூதியம் வாங்குவோர் இதை செய்யக்கூடாது: வெளியானது திடீர் உத்தரவு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)