வாகன உற்பத்தி நிறுவனங்கள் பரிந்துரைத்த வரம்பிற்குள், வாகனங்களில் எரிபொருளை நிரப்புவது பாதுகாப்பானதுஎன, இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. கோடை காலத்தில் வாகனத்தில் பெட்ரோலை பாதி நிரப்பினால் போதும். அதிகம் நிரப்பினால் எரிபொருள் டேங்கில் வெடிப்பை ஏற்படுத்தும் என்ற தவறான தகவல் பரவி வருகிறது.
முழு கொள்ளளவு (Full Capacity)
இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் விடுத்த செய்திக் குறிப்பு: மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள், செயல்திறன் தேவை, பாதுகாப்பு அம்சங்கள், சுற்றுச்சூழல் ஆகிய அனைத்து அம்சங்களையும் கருத்தில் வைத்து, வாகனங்களை வடிவமைக்கின்றன. எனவே, குளிர்காலம் அல்லது கோடை காலம் எதுவாக இருந்தாலும் அதிகபட்ச வரம்பிற்கு வாகனங்களில் எரிபொருளை நிரப்பலாம். அது முற்றிலும் பாதுகாப்பானது.
வாகன ஓட்டிகள் இடையே திணிக்கப்பட்ட தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும். இல்லையெனில், பயத்தினால் அவர்கள் கவனம் சிதற வாய்ப்பு உருவாகும். பெட்ரோல் நிரப்பும் போது இனி எந்த பயமும் இல்லாமல் முழு கொள்ளளவு வரை நிரப்பலாம்.
மேலும் படிக்க