கொரோனா தொற்று நோய் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் கார் விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றுநோய் மக்களின் வருமானத்தை குறைத்துள்ளது, எனவே, இந்த ஆண்டு வாகன விற்பனையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார் நிறுவனங்கள் அதிக அளவிலான சலுகைகளை அளிக்கின்றன
ஊரடங்கின்போது கார் வணிகத்தை ஓரளவுக்கேனும் சீர் செய்ய, பெரும்பாலான நிறுவனங்கள் கார் விற்பனையில் வலுவான தள்ளுபடியை வழங்குகின்றன. உங்கள் பட்ஜெட் அனுமதித்தால், மலிவான விலையில் ஒரு நல்ல காரை வாங்குவதற்கான சிறந்த வாய்ப்பு உங்களுக்கு இப்போது கிடைத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு மே மாதம் மிக அதிக சலுகைகளுடன் விற்பனையில் இருக்கும் டாப் 5 கார்களை பற்றி இங்கே காணலாம்.
இந்த காரில் 3 லட்சம் வரை தள்ளுபடி
அதிகபட்ச தள்ளுபடியைப் பற்றி பேசினால், மஹிந்திராவின் (Mahindra) பிரீமியம் எஸ்யூவி அல்துராஸ் ஜி 4 (Alturas G4 ) பட்டியலில் முதலிடத்தில் உள்ளது இந்த காரின் விலை ரூ. 28.74 லட்சத்திலிருந்து தொடங்கி ரூ .31.74 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரை செல்கிறது. இது 2.2 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் எஞ்சினை (180PS / 420Nm) கொண்டுள்ளது. இது 7-ஸ்பீடு AT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரை வாங்கினால், 2.2 லட்சம் ரூபாய் ரொக்க தள்ளுபடி, 50 ஆயிரம் ரூபாய் வரை பரிமாற்ற போனஸ், 11,500 ரூபாய் கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பாகங்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இந்த காரில் ரூ .1.5 லட்சம் வரை தள்ளுபடி
இந்தியாவில் விற்கப்படும் ஹூண்டாயின் ஒரே மின்சார கார் இதுவாகும். ஹூண்டாய் கோனா ( Hyundai Kona முழு சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 452 கி.மீ வரையிலான ரேஞ்சை வழங்குகிறது, மேலும் இது வெறும் 9.7 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய வேகத்தை பெறுகிறது. காரின் விலை ரூ .23.77 லட்சத்தில் தொடங்கி ரூ .24.96 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரை செல்கிறது. மே மாதத்தில், இந்த மின்சார எஸ்யூவிக்கு 1.5 லட்சம் ரூபாய்க்கான ரொக்க தள்ளுபடி கிடைக்கிறது. இது தவிர, வேறு எந்த விலக்குகளும் வழங்கப்படவில்லை.
இந்த காரில் நிறுவனம் 1 லட்சம் தள்ளுபடி அளிக்கிறது
ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) காரின் விலை ரூ .9.73 லட்சத்திலிருந்து தொடங்கி ரூ .14.12 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம்) செல்கிறது. இந்த காரில் மாறுபாடுகளுக்கு ஏற்ப வெவ்வேறு தள்ளுபடிகள் கிடைக்கின்றன. அதிகபட்ச தள்ளுபடி 1.3 லிட்டர் டர்போ ஆர்எக்ஸ்எஸ் வகைகளில் கிடைக்கிறது. இதில் நிறுவனம் 30 ஆயிரம் ரூபாய் ரொக்க தள்ளுபடி, 30 ஆயிரம் ரூபாய் பரிமாற்ற போனஸ், 15 ஆயிரம் ரூபாய் வரையிலான ராயல்டி போனஸ் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் வரையிலான கார்ப்பரேட் தள்ளுபடி (அல்லது கிராமப்புற தள்ளுபடி 15 ஆயிரம் ரூபாய்) ஆகியவற்றை வழங்குகிறது.
இந்த காரில் 98 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி
மஹிந்திரா எக்ஸ்யூவி 500 (Mahindra XUV500) காரின் விலை ரூ .15.52 லட்சத்தில் தொடங்கி ரூ .20.03 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம்) செல்கிறது.இந்த காரில் , வெவ்வேறு வகைகளுக்கு ஏற்ப 51,500 வரை ரொக்க தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது. இது தவிர, 25,000 பரிமாற்ற போனஸ் மற்றும் ரூ .6,500 கார்ப்பரேட் தள்ளுபடியும் கிடைக்கிறது. காருடன், 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காரின் பாகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இந்த நிறுவனம் 78 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அளிக்கிறது
நிசான் கிக்ஸ் (Nissan Kicks) எஸ்யூவி கார்களின் விலை ரூ .9.49 லட்சம் முதல் ரூ .14.64 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம்) உள்ளது. நிறுவனம் தனது எஸ்யூவியில் 75 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி அளிக்கிறது. இதில் 20 ஆயிரம் ரூபாய் வரை ரொக்க தள்ளுபடி, 50 ஆயிரம் ரூபாய் வரை பரிமாற்ற போனஸ் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் போனஸ் ஆகியவை அடங்கும்.
மேலும் படிக்க..
Maruti Suzuki : பம்பர் சலுகை , மிகக் குறைந்த விலையில் கார்களை வாங்கலாம்!