பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 2 February, 2022 8:27 AM IST

உயிரில் பூங்காவைச் சேர்ந்த பெண் சிங்கம் ஒன்று, பராமரிப்பாளர் ஏமாந்த நேரம் பார்த்து அவரைக் கொன்றுவிட்டு, மற்றொரு சிங்கத்துடன் தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூண்டியில் இருந்து வெளியேறிய பெண் சிங்கம், பராமரிப்பாளரை கடுமையாகத் தாக்கியதாலேயே அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

ஈரான் நாட்டில் மர்காசி மாகாணத்தின் அராக் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் சிங்கம் உள்ளிட்ட பல வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்கா பல ஆண்டுளாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு வளர்க்கப்பட்டு வந்த 2 சிங்கங்கள் திடீரென கூண்டை எப்படியோ திறந்துகொண்டு வெளியேறின.

சிறிது நேரத்தில் சிங்கங்களுக்கு பராமரிப்பாளர் உணவு கொண்டு வந்துள்ளார். அப்போது கூண்டியில் இருந்து வெளியேறிய சிங்கங்களில் பெண் சிங்கம், அந்த பராமரிப்பாளரை கடுமையாக தாக்கியது.
இதில் பராமரிப்பாளர் சம்பவயிடத்தைலேயே உயிரிழந்தார். பின்னர் இரண்டு சிங்கங்களும் அங்கிருந்து தப்பிச் சென்றன.

சினிமா பாணியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர். உயிரியல் பூங்கா முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. நீண்ட நேரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு தப்பியோடிய 2 சிங்கங்களும் சிக்கியதாகத் தெரிகிறது. அவை தற்போது, பாதுகாப்பு படையினர் வசம் இருப்பதாகச் செய்தி வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க...

நாடு முழுவதும் இன்று முதல் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

ஒமிக்ரான் வேகமாக குறையும்: அமெரிக்க அறிவியலாளர் நம்பிக்கை!

 

English Summary: Caretaker Murder - Escaped Lions!
Published on: 02 February 2022, 08:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now