கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நெகமத்தில், எலிக்கு வைக்கப்பட்ட கேரட்டை சாப்பிட்டக் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. எலித் தொல்லையை ஒழிப்பதற்காக, கேரட்டின் மீது பூச்சி மருந்து தடவி வைக்கப்பட்டிருந்தது. இதை உணராமல், மாணவி கேரட்டை எடுத்துச் சாப்பிட்டுள்ளார்.
கல்லூரி மாணவி
நெகமத்தில் உள்ள செங்குட்டைப்பாளையத்தை சேர்ந்தவர்கள் தேவசித்து -கிரேஷி தம்பதி. இவர்கள் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவரது மகள் எனிமா ஜாக்குலின் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவம் நிகழ்ந்த அன்று, ரெம்பப் பசியாக இருக்கு என்று தனது அம்மாவிடம் கூறியுள்ளார் எனிமா. அதற்கு, நூடுல்ஸ் எடுத்து சமைத்து சாப்பிடு என்று கிரேஷி அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால் நூடுல்ஸ் செய்து சாப்பிடுவதற்கு நேரம் எடுக்கும் என்பதால், எனிமா தங்கள் மளிகைக் கடையில் வைக்கப்பட்டிருந்தக் கேரட்டை எடுத்துச் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த எனிமா, திடீரென மயங்கினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த ஜாக்குலின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணை
மளிகைக் கடையில் இருந்த எலிகளை ஒழிப்பதற்காகக், கேரட் மீது பூச்சி மருந்து தெளித்து வைத்துள்ளனர். இதை அறியாத எனிமா ஜாக்குலின் மருந்து தெளித்த கேரட் சாப்பிட்டதே அவரது மரணத்திற்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க...
குளிருக்காகப் பற்ற வைத்தஅடுப்பு- பறிபோன 5 உயிர்கள்!
கண்ணத்தில் அறைந்த மணமகன்- கல்யாணத்தை நிறுத்திய மணமகள்