Others

Wednesday, 09 November 2022 07:55 PM , by: Elavarse Sivakumar

பொங்கல் பரிசுத் தொகுப்புக்குப் பதிலாக ரொக்கப் பணமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல், ரேஷன் அட்டைதாரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பரிசுத் தொகுப்பு

பொங்கல் பண்டிகை சமயத்தில் தமிழக அரசு தரப்பிலிருந்து பொதுமக்களுக்கு கரும்பு மற்றும் பொங்கல் வைப்பதற்கும் பலகாரங்கள் செய்வதற்குமான சிறப்புப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இச்சலுகை வழங்கப்படுகிறது.

21 பொருட்கள்

இந்த ஆண்டு (2022) பொங்கல் பண்டிகை சமயத்தில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. பச்சரிசி, வெல்லம், முந்திரிப் பருப்பு, திராட்சை, ஏலக்காய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.

புகார்கள்

இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், சில இடங்களில் பொருட்களை வழங்கும்போது சில பொருட்கள் விடுபட்டுவிட்டதாகவும், சில பொருட்கள் தரமில்லாமல் இருந்ததாகவும் புகார்கள் வந்தன.

விமர்சனம்

இதுபோன்ற புகார்களை தவிர்க்க எல்லா அங்காடிகளிலும் பொருள் பட்டியலை வைக்கவும், ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்களை சரிபார்த்து எடுத்துச்செல்லவும் அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் இத்திட்டம் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.

பிரச்னையைத் தவிர்க்க

எனவே 2023 பொங்கல் பண்டிகை சமயத்திலும் பொருட்கள் விநியோகத்தில் பிரச்சினைகள் இருக்கக் கூடாது என்பதற்காக பொருட்களுக்குப் பதிலாக ரொக்கப் பணமாகவே வழங்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டன. பணமாகக் கொடுத்தால் அதை வைத்து மக்களே கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்வார்கள் எனவும், பொங்கல் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.1000?

இதற்கு முன்னர் வழங்கியது போல 1000 ரூபாய் வழங்கப்படுமா அல்லது அதை விட அதிகமாக வழங்கப்படுமா என்பது அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தால் மட்டுமே தெரியும். இன்னும் இரண்டு மாதங்கள் இருப்பதால் அதற்கான ஆலோசனையில் இருப்பதாகத் தெரிகிறது.

மேலும் படிக்க...

ரூ.2000 இனிமேல் கிடையாது- ரிசர்வ் வங்கியின் ஷாக் தகவல்!

பெண் லட்சாதிபதி திட்டம்-ரூ.5 லட்சம் வரைவட்டியில்லாக் கடன்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)