ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை ஒரே வாரத்தில் இரண்டு முறை உயர்த்தியுள்ளது இந்த வங்கி. இதனால் முதியோர்களுக்கு இரண்டு போனஸ்போல வட்டி உயர்ந்துள்ளது.
வங்கிகளில் முதலீடு செய்திருக்கும் பணத்திற்கு பாதுகாப்பு அதிகம். அதேநேரத்தில், நம் முதலீட்டிற்கான வட்டியை வங்கி நிர்வாகம் உயர்த்தினால், மகிழ்ச்சிதான். அந்த வகையில், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4.90% ஆக உயர்த்தி கடந்த வாரம் அறிவித்தது. இதையடுத்து, ஃபிக்சட் டெபாசிட் (Fixed Deposit) முதலீட்டாளர்கள் காட்டில் பணமழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. ஏனெனில், கிட்டத்தட்ட பெரும்பாலான வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்திவிட்டன.
0.25%
அதிலும், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி பேங்க் (HDFC Bank) ஒரே வாரத்தில் இரண்டு முறை ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. முதலில் ஜூன் 15 முதல் எச்டிஎஃப்சி வங்கி ஃபிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்தியது. இதைத்தொடர்ந்து, எச்டிஎஃப்சி வங்கியின் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் 0.25% உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வட்டி உயர்வு ஃபிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்களுக்கும், சீனியர் சிட்டிசன்களுக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது வாடிக்கையாளர்களைக் காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.50% வட்டி வழங்குகிறது எச்டிஎஃப்சி வங்கி.
புதிய வட்டி
பொது வாடிக்கையாளர்களுக்கு
7 - 14 நாட்கள் : 2.75%
15 - 29 நாட்கள் : 2.75%
30 - 45 நாட்கள் : 3.25%
46 - 60 நாட்கள் : 3.25%
61 - 90 நாட்கள் : 3.25%
91 நாட்கள் - 6 மாதம் : 3.75%
6 மாதம் - 9 மாதம் : 4.65%
9 மாதம் - 1 ஆண்டு : 4.65%
1 ஆண்டு : 5.35%
1 ஆண்டு - 2 ஆண்டு : 5.35%
2 ஆண்டு - 3 ஆண்டு : 5.50%
3 ஆண்டு - 5 ஆண்டு : 5.70%
5 ஆண்டு - 10 ஆண்டு : 5.75%
சீனியர் சிட்டிசன்களுக்கு
மூத்தக் குடிமக்களுக்கு பின்வரும் விதத்தில் வட்டி வழங்கப்படுகிறது.
7 - 14 நாட்கள் : 3.25%
15 - 29 நாட்கள் : 3.25%
30 - 45 நாட்கள் : 3.75%
46 - 60 நாட்கள் : 3.75%
61 - 90 நாட்கள் : 3.75%
91 நாட்கள் - 6 மாதம் : 4.25%
6 மாதம் - 9 மாதம் : 5.15%
9 மாதம் - 1 ஆண்டு : 5.15%
1 ஆண்டு : 5.85%
1 ஆண்டு - 2 ஆண்டு : 5.85%
2 ஆண்டு - 3 ஆண்டு : 6%
3 ஆண்டு - 5 ஆண்டு : 6.20%
5 ஆண்டு - 10 ஆண்டு : 6.50%
மேலும் படிக்க...