Others

Sunday, 21 August 2022 09:24 PM , by: Elavarse Sivakumar

ஃபிட்மெண்ட் காரணி தொடர்பான முடிவை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி அரசு ஊழியர்களின் சம்பளம் அதிரடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடிப்படை சம்பளம்

ஃபிட்மெண்ட் காரணி தொடர்பான இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டால் 52 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயரும். மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அகவிலைப்படி அமல்படுத்தப்பட உள்ளது.

4-5%

உண்மையில், AICPI தரவுகளின்படி, இந்த மாதம் அகவிலைப்படியில் 4 முதல் 5% வரை அதிகரிக்கலாம். இதுவரை, ஜூலை வரையிலான AICPI குறியீட்டின் தரவுகள் மட்டுமே வந்துள்ளன.இதற்கிடையில் ஃபிட்மெண்ட் காரணியை அரசு உயர்த்தினால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் அதிகரிக்கும்.

அதேபோல, 8ஆவது ஊதியக் குழுவும் விரைவில் அமைக்கப்படவுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 7ஆவது ஊதியக் குழுவில், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ஃபிட்மென்ட் காரணியால் தீர்மானிக்கப்படுகிறது.

2.57 மடங்கு

ஃபிட்மெண்ட் காரணி அதிகரித்தால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் உயரும். இந்த ஃபார்முலா காரணமாக, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் இரண்டரை மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. தற்போது, ஊழியர்களின் ஃபிட்மெண்ட் காரணி 2.57 மடங்கு என்ற விகிதத்தில் உள்ளது.

எவ்வளவு உயரும்?

இதன் அடிப்படையில், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18000 ஆகவும், அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ.56900 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

ஒரு சரக்கு வாங்கினால், 2 பாட்டில் இலவசம் - குஷியில் குடிமகன்கள்!

கூழ் காய்ச்சும் போது வலிப்பு -பாத்திரத்தில் விழுந்து இளைஞர் மரணம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)