அரசு ஊழியர்களின் ஜூலை மாதத்திற்கான ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவைவு விபரத்தை தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதனால், அகவிலைப்படி உயர்த்தப்படும் சூழல் உருவாகியுள்ளதால், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜூலை மாதத்திற்கான ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவைவு தொழிலாளர் அமைச்சகத்தால், வெளியிடப்பட்டுள்ளது. இது,ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த தரவு 0.7 புள்ளிகள் அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 129.2 ஆக இருந்தது. ஜூலையில் 129.9 ஆக அதிகரித்துள்ளது. இந்த உயர்வு காரணமாக, அடுத்த ஆண்டு ஜனவரியில் ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 28 ஆம் தேதி
ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளின் அடிப்படையில், அடுத்த ஆண்டு ஜனவரியில் அகவிலைப்படி அதிகரிக்கும். ஜனவரி முதல் ஜூன் வரையிலான தரவுகளின் அடிப்படையில், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியானது நவராத்திரி நேரத்தில் அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் என்று வட்டாரங்கள் கூறுகின்றன. இம்முறை அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு மாத பாக்கி கிடைக்கும்
7வது ஊதியக் குழுவின் அடிப்படையில், ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுகிறது. இதன் அடிப்படையானது ஆறு மாத AICPI இன்டெக்ஸ் ஆகும். இந்த முறை ஜூலையில் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பிறகு, ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் இரண்டு மாத நிலுவைத் தொகையுடன் கிடைக்கும்.
எவ்வளவு அதிகரிக்கும்
இம்முறை அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு 34ல் இருந்து 38 சதவீதமாக உயரும். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அகவிலைபப்டி 38 சதவீதமானால், சம்பளத்தில் நல்ல ஏற்றம் இருக்கும். இந்த புள்ளிவிவரங்களை தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ளது
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (ஏஐசிபிஐ) புள்ளிவிவரங்கள் தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. 88 மையங்களுக்கும், நாடு முழுவதற்குமான குறியீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளில் ஏஐசிபிஐ வெளியிடப்படுகிறது.
மேலும் படிக்க...