Others

Thursday, 07 September 2023 04:56 PM , by: Muthukrishnan Murugan

Chance of rain in 13 districts in next 2 hours

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இரவு 7 மணி வரையிலான வானிலை எச்சரிக்கையில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருவள்ளூர், ராணிபேட், வேலூர், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் சார்பில் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பினை முனைவர் கீதா வெளியிட்டுள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-

07.09.2023 & 08.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

09.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

10.09.2023 முதல் 11.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 12.09.2023 & 13.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தினைப் பொறுத்தவரை நீலகிரி மாவட்டம் வெண்ட் வொர்த் எஸ்டேட், செர்முல்லு மற்றும் தோவாலா பகுதியில் அதிகப்பட்சமாக தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேப்போல், தஞ்சாவூரில் அதிகப்பட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தற்போது வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 5 மி.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வானிலை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Mausam.imd.gov.in/Chennai என்கிற இணையதளத்தை காணவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் காண்க:

UPI ATM- டெபிட் கார்டுகளை தூக்கிப்போடும் நேரம் வந்தாச்சு!

பாரம்பரிய காய்கறி விதை மீட்டெடுக்கும் விவசாயிகளா நீங்கள்?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)