சர்வதேச அளவில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் விழா இன்று 09-08-2022 அன்று நிறைவு பெறுகிறது. இந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28, 2022 அன்று தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
தொடக்க நாள் அன்று, இந்தியாவின் வெற்றுமையில் ஒற்றுமை கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் குறிப்பாக, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நடன நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து லிடின் நாதஸ்வராத்தின் இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது. தொடக்க நாள் முதல் ஆனல் பறக்க ஆரம்பிக்கப்பட்ட இவ்விளையாட்டு விழா, நிறைவுக்க வருகிறது.
இன்று மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச சதுரங்கப் போட்டியின் பத்தாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்கள், விருந்தினர்களுக்கும் தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் வகையில் கீழடி தொல்லியல் ஆய்வு, திருக்குறள் ஆகியவற்றின் ஆங்கில, பிரேஞ்சு மற்றும் ஸ்பானிஷ் மொழியாக்க நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.
44வது சர்வதேச சதுரங்கப் போட்டி "நிறைவு விழா" இன்று மாலை 6 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சுற்றுச் சுழல் - காலநிலை மாற்றுத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் மற்றும் சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச் முன்னிலையில் நடைபெறும்.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இந்திய அணி ஆலோசகர், டாக்டர் சஞ்சய் கபூர் அனைத்திந்திய சதுரங்க கூட்டமைப்பு மற்றும் பாரத்சிங் சௌஹான், 44வது சர்வதேச சதுரங்கப் போட்டி இயக்குநர் அவர்களும் கலந்துக்கொள்வார்கள்.
மேலும் படிக்க: