Others

Wednesday, 25 October 2023 04:22 PM , by: Muthukrishnan Murugan

Yellow Alert warning

தீவிர புயலாக உருவாகிய ஹாமூன் வலுவிழந்த நிலையில், மற்ற கரையோரம் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்னும் ஒரு சில தினங்களில் கனமழையினை எதிர்ப்பார்க்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று (24-10-2023) காலை வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் ஹாமூன் நேற்று மாலை 17:30 மணி அளவில் தீவிர புயலாக வலுவிழந்தது. இன்று (25-10-2023) காலை 01:30-02:30 மணி அளவில் புயலாக வலுவிழந்து வங்கதேச கரையை தெற்கு சிட்டகாங் (Chittagong)-க்கு அருகில் கடந்தது.

வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதைப் போல், தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

25.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26.10.2023 முதல் 28.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

29.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை விழுப்புரம், கடலூர், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் களமழை பெய்ய வாய்ப்புள்ளது.

30.10.2023 மற்றும் 31.10.2023; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

போடிநாயக்கனூர் (தேனி) 5. பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), சோத்துப்பாறை (தேனி), வால்பாறை TO (கோயம்புத்தூர்) தலா 3. வேதாரண்யம் (நாகப்பட்டினம்), மானாமதுரை (சிவகங்கை), ராமநாதபுரம் (ராமநாதபுரம்), தொண்டி (ராமநாதபுரம்), ஸ்ரீவில்லிபுத்தார் (விருதுநகர்). கூடலூர் (தேனி), தேக்கடி (தேனி) பெரியாறு (தேனி) தலா 2.

சிவகிரி (தென்காசி) பயணியர் விடுதி சிவகங்கை (சிவகங்கை), வீரபாண்டி (தேனி) பெலாந்துறை (கடலூர்), அரண்மனைப்புதூர் (தேனி), கருப்பாநதி அணை(தென்காசி), மணியாச்சி (தூத்துக்குடி) தலா 2.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை. மேலும் வானிலை தொடர்பான விவரங்களுக்கு: mausam.imd gov.in/chennai என்கிற இணையதளத்தை காணவும்.

இதையும் காண்க:

ஒரு சர்வே எண்ணுக்கு ஒரு பதிவு தான்- விவசாயிகளுக்கு எச்சரிக்கை

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த முதல்வர்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)