ஜப்பானில் கரப்பான் பூச்சியில் இருந்து தயாரிக்கப்படும் பீர் (Beer) தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுவில் பூச்சி இருந்தாலே அதை கண்டு கொதித்தெழுந்து நீதிகெட்கும் பல குடி மகன்களை நாம் கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் ஜப்பானில் கரப்பான் பூச்சியிலிருந்து பீரை தயாரித்து வெற்றிக்கரமாக விற்பனை செய்து வருகின்றனர்.
கரப்பான் பூச்சியில் பீர் (Cockroach beer)
ஜப்பான் நாட்டில் மட்டுமே கரப்பான் பூச்சியிலிருந்து பீர் தயாரிக்கப்படுவதாக சொல்கின்றனர்.”கபுடோகாமா” எனப்படும் பாரம்பரிய முறைப்படி நன்னீரில் வாழும் கரப்பான் பூச்சிகளை பிடித்து அவற்றை வெந்நீரில் வேக வைத்து, பின்னர் இரண்டு நாட்களுக்கு அதை உற வைக்கின்றனர்.
தனிச்சிறப்பு
அதன்பின்பு அதிலிருந்து எடுக்கப்படும் சாறு பீராக மாற்றப்படுகிறது. இதனை தயாரித்த பின்பு வடிக்கட்டப்பட்டு வருவதால் இந்த பீர் தனிச்சிறப்பு பெற்ற பீர் என அனைவராலும் கூறப்பட்டு வருகிறது.
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து இதனை ஜப்பானியர்கள் தயாரித்து குடித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு வருகின்றனர். இதனை ஜப்பானில் Insect sour அல்லது konchu sour என அழைக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க
உங்களுடைய ஆதார் கார்டு தொலைந்துவிட்டதா? கவலைய விடுங்க இதைப் பண்ணுங்க!