அஸ்ஸாமின் காஸிரங்கா தேசிய பூங்காவில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்தில் குளிரால் தவிக்கும் யானைக்குட்டிகளுக்கு போர்வை போர்த்தப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
சில்லை காலன் (Chillai Kalan)
ஜம்மு காஷ்மீரில் சில்லை காலன் (Chillai Kalan) எனப்படும் அதீத குளிர் காலம் தொடங்கியுள்ளது. ஆண்டு தோறும் டிசம்பர் 21 முதல் ஜனவரி 29 வரையிலான 40 நாட்கள் ஜம்மு காஷ்மீரில் கடுங்குளிர் நிலவும். இந்த காலகட்டத்தில் பூஜ்ஜியம் டிகிரிக்கு கீழ் செல்லும் தட்பவெப்ப நிலையால் நீர்நிலைகள் உறைவது வழக்கம்.
இதனால் பிரபலமான சுற்றுலாத்தலமான தால் ஏரி உள்ளிட்ட ஏரிகளும் முற்றிலும் உறைந்து காணப்படும்.
யானைகளுக்கு போர்வை (Blanket for elephant)
மேலும் அசாமில் குளிருக்கு இதமாக குட்டி யானைகளுக்கு போர்வை போர்த்தப்படுகிறது. வடமாநிலங்களில் நிலவும் கடும் குளி்ரால் வன விலங்குகளும் அவதியடைந்து வருகின்றன. இந்நிலையில் அஸ்ஸாமின் காஸிரங்கா தேசிய பூங்காவில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்தில் குளிரால் தவிக்கும் யானைக்குட்டிகளுக்கு போர்வை போர்த்தப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
மேலும் படிக்க
தொடரும் பனிப்பொழிவால் பூக்கள் விலை உயர்வு!
பச்சிளங் குழந்தையை பாதுகாத்த நாய்: ஆச்சரியத்தில் கிராம வாசிகள்!