மத்திய பிரதேசத்தில், மின் தடை காரணமாக மணப்பெண்கள் மாறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு அஸ்லானா கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் பீவேர், தன் மகள்கள் கோமல், நிகிதா, கரிஷ்மா மூவருக்கும், ஒரே நாளில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார். இதையடுத்து, திருமண மண்டபத்தில் உறவினர்களும், நண்பர்களும் குவிந்திருந்தனர்.
மின் தடை (Power outage)
வட மாநிலங்களில், இரவில் தான் திருமணம் நடப்பது வழக்கம். அவர்கள் வழக்கப்படி, மணமகள்கள் மூவரும் முகத்தை மூடியவாறு, மணமேடைக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது, திடீரென மின் தடை ஏற்பட்டது. மண்டபத்தில் ஜெனரேட்டர் வசதியும் இல்லை. முகூர்த்த நேரம் நெருங்கிய நிலையில், மணமக்களை மேடையில் அமர வைத்து சடங்குகள் நடத்தப்பட்டன. முக்கிய சடங்கு நடக்க இருந்த போது, மின்சாரம் வந்தது.
மண்ப்பெண் மாற்றம் (Brides Change)
அப்போது, மேடையில் அமர்ந்திருந்த மணமக்களை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில், நிகிதாவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை அருகே கரிஷ்மாவும், கரிஷ்மாவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை அருகே நிகிதாவும் அமர்ந்திருந்தனர்.
மின் தடையால் ஏற்பட்ட தவறை உணர்ந்த உறவினர்கள், நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைகளுடன் மணப்பெண்களை மாற்றி அமர வைத்து, திருமணத்தை சிறப்பாக நடத்தினர். இந்த சம்பவத்தின் 'வீடியோ' பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மேலும் படிக்க
குடும்ப நிதிப் பிரச்னைகளை தீர்க்க சில வழிகள்!
டி.சி.,யில் இடம்பெறுகிறது மாணவர்களை நீக்கிய காரணம்: அமைச்சர் மகேஷ்!